விளையாட்டு

IPL Match 32 – 9 ஓவரில் போட்டியை முடித்த டெல்லி அணி

10 அணிகள் பங்கேற்கும் 17வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்றுவரும் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் தொடக்க வீரர்களாக சஹா, சுப்மன் கில் (கேப்டன்) களமிறங்கினர்.

கில் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் மூலம் அவுட் ஆனார். சஹா 2 ரன்னில் அவுட் ஆனார்.

அடுத்துவந்த சாய் சுதர்சன் 12 ரன்னிலும், டேவிட் மில்லர் 2 ரன்னிலும், அபினவ் மனோகர் 8 ரன்னிலும், ஷாருக் கான் ரன் எதுவும் எடுக்காமலும் (0) அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

குஜராத் டைட்டன்ஸ் அணி 8.4 ஓவரில் 48 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. ராகுல் திவேதியா 10 ரன்னிலும், மோகித் சர்மா 2 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். சற்று நிலைத்து நின்று ஆடிய ரஷித் கான் அதிகபட்சமாக 23 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இறுதியில் 17.3 ஓவரில் குஜராத் டைட்டன்ஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்களில் சுருண்டது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஒரு அணி அடித்த குறைந்தபட்ச ரன்கள் இதுவாகும்.

சிறப்பாக பந்து வீசிய டெல்லி அணியின் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும், ஸ்டப்ஸ் 2 விக்கெட்டுகளையும், கலீல் அகமது, அக்சர் பட்டேல் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.

அந்த அணியின் பிரித்வி ஷா 7 ரன்களிலும், ஜேக் பிரேசர் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய அபிஷேக் பொரெல் 15 ரன்களிலும், ஷாய் ஹோப் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இந்த நிலையில், 8.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 92 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

குஜராத் அணி சார்பில் சந்தீப் வாரியர் 2 விக்கெட்டுகளையும், ரஷித் கான் மற்றும் ஜான்சன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

 

(Visited 1 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content