வட அமெரிக்கா

iPhone வாங்குவதற்காக 8 மாத குழந்தையை விற்ற தம்பதி…!

மேற்கு வங்காள மாநிலம், வடக்கு 24 பர்கானா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஷதி, ஜெயதேவ் என்கிற தம்பதி 10 மாதம் சுமந்து பெற்றெடுத்த குழந்தையை சமூக வலைதள மோகத்தால் விற்பனை செய்து உள்ளனர். அதுவும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதற்காக ஐபோன் வாங்க இந்த காரியத்தை செய்து உள்ளனர்.

பொருளாதார நெருக்கடியில் இருந்த தம்பதியினர் திடீரென ஐபோன் வாங்கியதை அக்கம்பக்கத்தினர் கவனித்து இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.இதை தொடர்ந்து பொலிஸார் குழந்தையை விற்ற தாய் ஷதி மற்றும் வாங்கிய பிரியங்கா கோஷ் என்ற பெண் ஆகியோரை கைது செய்துள்ளனர். அதோடு தலைமறைவாக உள்ள குழந்தையின் தந்தை ஜெயதேவை பொலிஸார் தேடி வருகின்றனர்.

குழந்தையை விற்று பணத்தைப் பயன்படுத்தி மேற்கு வங்காளத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று இன்ஸ்டாகிராம் ரீல்களை உருவாக்கினோம் என்று ஒப்புதல் அளித்து உள்ளார்.அதிர்ச்சியூட்டும் வகையில் முதலில் ஏழு வயது மகளை தந்தை விற்க முயன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்