விளையாட்டு

INDvsSA – இரண்டாவது நாளிலேயே முடிந்த டெஸ்ட் போட்டி

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 34.5 ஓவரில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, பர்கர், நிகிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

98 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 36.5 ஓவரில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மார்கிரம் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து சதமடித்து 106 ரன்னில் அவுட்டானார்.

இந்தியா சார்பில் பும்ரா 6 விக்கெட்டும், முகேஷ் குமார் 2 விக்கெட்டும், சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 2வது இன்னிங்சில் 12 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என சமனிலையில் முடிந்தது.

ஆட்ட நாயகன் விருது முகமது சிராஜுக்கும், தொடர் நாயகன் விருது பும்ரா மற்றும் டீன் எல்கர் ஆகியோருக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக குறைந்த ஓவர்களில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் முடிந்துள்ளது.

இந்தப் போட்டியில் இரு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 107 ஓவர்களே வீசப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

KP

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ