இலங்கை செய்தி

விமான நிலையத்தில் பல மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் சுமார் 34.19 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை ஒருவர்  சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பெங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் 3 கிலோ 419 கிராம் நிறையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவர் 35 வயதுடையவர்  என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை