விளையாட்டு

மழையால் கைவிடப்பட்ட இந்தியா பாகிஸ்தான் போட்டி

ஆசிய கோப்பை 2023 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 48.5 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

மிடில் ஆர்டரில் களமிறங்கிய இஷான் கிஷன், ஹர்திக் பான்டியா ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இஷான் கிஷன் 9 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 82 ரன்னும், ஹர்திக் பான்டியா 87 ரன்னும் குவித்து அசத்தினர்.

பாகிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஷகீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்டும், ஹாரிஸ் ரவுப் 3 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 267 ரன்கள் எடுத்தால் பாகிஸ்தான் வெற்றி என்ற நிலையில் மழை குறுக்கிட்டது. தொடர் மழையால் ஆட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

(Visited 10 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content