இலங்கை

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொழும்பின் பல பகுதிகளில் இன்று நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு இன்று இரவு 07.00 மணி முதல் நாளை அதிகாலை 05.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக குறித்த நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

நீர் வெட்டு காரணமாக பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்