ஐரோப்பா

பிரித்தானியாவில் வரி விலக்கு வரம்பு தொடர்பில் முக்கிய அறிவிப்பு

தனிநபர் வரி விலக்கு  (personal allowance) வரம்புகள் குறித்து தீர்க்கமான நடவடிக்கை எடுக்க நிதியமைச்சர் ஜோன் ஹீலியை வலியுறுத்தும் பிரச்சாரம் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட வரவுசெலவு திட்டத்தில் இது தொடர்பில் ஜோன் ஹீலி எந்த பதிலையும் வழங்காத நிலையில்  பாராளுமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வரும் சனிக்கிழமை வரை மட்டுமே அமுலில் இருக்கும் இந்த மனுவில்,   “வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், தனிநபர் வரி விலக்கு வரம்பு (personal allowance) மாற்றப்படாமல் அப்படியே வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால், தொழிலாளர்கள் நடைமுறையில் அதிக வரி செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த வரம்பை £20,000 ஆக உயர்த்தினால், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் கைகளில் கூடுதல் பணம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அதிகரித்து வரும் கட்டணங்களைச் சமாளிக்கவும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டுபவர்களுக்கு ஆதரவளிக்கவும் உதவும்.” எனவும் அந்த மனுவில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவிற்கு ஆதரவாக 10,000 கையொப்பங்கள் திரட்டப்பட்டுள்ளன.

மனுவின்படி, தற்போது £12,570 ஆக உள்ள குறைந்தபட்ச வரி விலக்கு வரம்பை £20,000 ஆக உயர்த்துமாறு  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2021 முதல் £12,570 வரியானது வரும்  2031 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிலருக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் குறைந்த வரி செலுத்தவும், குறைந்த வருமானம் பெருபவர்கள் நிதி சுமையை எதிர்கொள்ளவும் நேரிடும் என பொருளாதார நிபுணர்கள் பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்