பொழுதுபோக்கு

ரம்யாவின் ஆபாச வீடியோ… “சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்”

மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி, விஜய்யின் மாஸ்டர், அஜித்தின் விடாமுயற்சி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் தொகுப்பாளினி ரம்யா சுப்பிரமணியன்.

இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்களை கொண்டுள்ள இவர், தொடர்ந்து தன்னைப் பற்றிய வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் அவரை ஆபாசமாக சித்தரித்து அவரது குரலையும் மாற்றம் செய்து விஷமிகள் யாரோ ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.

இந்த வீடியோ ரம்யா சுப்பிரமணியத்தின் கவனத்திற்கு சென்றதை அடுத்து இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார்.

அதில், ‛‛என்னுடைய வீடியோவை ஏஐ மூலம் தவறாக சித்தரிப்பது இது மூன்றாவது முறையாகும். சட்டத்துக்கு புறம்பாக என்னுடைய தனிப்பட்ட உரிமைகளை மீறி இதுபோன்று செய்வது மோசடியான செயலாகும்.

இதை இனிமேலும் நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என்று ஒரு எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்