பாகிஸ்தானில் இரு வாகனங்கள் மோதி கோர விபத்து – 13 பேர் பலி
தென்மேற்கு பாகிஸ்தானில் இடம்பெற்ற சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் காயமடைந்துள்ளனர்.
பலுசிஸ்தான் மாகாணத்தின் உத்தல் மாவட்டத்தில், கராச்சி நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு பயணிகள் பேருந்து, பயணிகளை ஏற்றிச் சென்ற மற்றொரு வாகனத்தின் மீது மோதியபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
விபத்தில் இரு வாகனங்களின் ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிகளை முறையாக அமல்படுத்தாதது, அதிவேகம், மோசமான சாலைப் பாதுகாப்புத் தரங்கள் மற்றும் பொறுப்பற்ற ஓட்டுதல் ஆகியவற்றால் பாகிஸ்தானில் இதுபோன்ற விபத்துக்கள் சாதாரணமாக நிகழ்கின்றன என்று கூறப்படுகிறது.




