இலங்கை

கொழும்பு-அவிசாவளை வீதியில் இடம்பெற்ற கோர விபத்து : 22 பேர் காயம்!

கொழும்பு-அவிசாவளை வீதியின் ஹன்வெல்ல எம்புல்கம பகுதியில் பஸ்ஸும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து  இன்று (ஜூன் 09) காலை இடம்பெற்றது.

விபத்தைத் தொடர்ந்து பஸ் மற்றும் லொறியின் சாரதிகள் உட்பட குறைந்தது 22 பேர் காயமடைந்த நிலையில்,  ஹோமாகம மற்றும் நவகமுவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கிச் சென்ற லொறி, அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துடன் நேருக்கு நேர் மோதியே  விபத்துக்குள்ளானது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்