ஐரோப்பா செய்தி

காய்ச்சலை அலட்சியப்படுத்தக் கூடாது – பெரும் சோகத்தில் பிரித்தானிய மக்கள்

  • December 20, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டு காய்ச்சல் பருவம் குறித்து பிரித்தானிய மக்கள் மத்தியில் பெரும் கவலை எழுந்துள்ளது. பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை அமைப்பும் இந்த ஆண்டு காய்ச்சலை “சூப்பர் ஃப்ளூ”, இதுவரை இல்லாத அளவிலான பரவல் என கூறினாலும், மருத்துவ நிபுணர்கள் இதனை வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் சாதாரண காய்ச்சல் பருவத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலங்களில் காய்ச்சல் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கத்தில், கடந்த ஒரு தசாப்தத்தில் […]

இந்தியா செய்தி

இஸ்ரோ வரலாற்றிலேயே அதிக எடையுள்ள செயற்கைக்கோள்: எல்விஎம் 3 மூலம் விண்ணில் பாய்கிறது

  • December 20, 2025
  • 0 Comments

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, அமெரிக்காவின் ‘புளூபோர்ட்-6’ என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை எதிர்வரும் டிசம்பர் 24-ஆம் திகதி விண்ணில் ஏவவுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து எல்விஎம் 3 ரக ராக்கெட் மூலம் காலை 8.55 மணிக்கு இந்த ஏவுதல் நடைபெறவுள்ளது. 6,500 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், இஸ்ரோ இதுவரை விண்ணில் செலுத்தியதிலேயே அதிக எடையுள்ள செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது. தொலைதூரப் பகுதிகளுக்கு அதிவேக 5G இணையதள சேவைகளை வழங்க உதவும் இந்தத் திட்டம், இஸ்ரோவின் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில்  மின் மோட்டார் சைக்கிள்களின் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

  • December 20, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு,மின் மோட்டார் சைக்கிள்களின் பாதுகாப்பு குறித்து அவசர சேவைகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. குறிப்பாக, மின் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அவற்றின் பேட்டரிகள் காரணமாக ஏற்படும் தீ விபத்துகள் குறித்து மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் பேட்டரிகள் தொடர்பாக பல தீ விபத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கேம்பிரிட்ஜ்ஷயர் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இவ்வாறான சம்பவங்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் […]

உலகம் ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் புதிய கட்டுமான விதிமுறை மாற்றங்களுக்குப் எதிர்ப்பு

  • December 20, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் புதிய கட்டுமான வீடுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட அணுகல் வசதிகளைக் கட்டாயமாக்கும் இலக்குகளில் அரசாங்கம் பாரிய குறைப்புகளைச் செய்துள்ளது. அனைத்து புதிய வீடுகளும் மேம்பட்ட தரநிலைகளுடன் கட்டப்பட வேண்டும் என்ற முந்தைய அரசின் 100 சதவீத உறுதிப்பாட்டை மாற்றி, தற்போது அதனை 40 சதவீதமாகக் குறைப்பதாகப் புதிய திட்டமிடல் அமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது மாற்றுத்திறனாளிகளைச் சமூகத்திலிருந்து ஒதுக்கும் செயல் என்றும், ஏற்கனவே இருந்த கொள்கையிலிருந்து அரசாங்கம் பின்வாங்குவது “நம்பமுடியாதது” என்றும் உரிமைப் போராட்டவாதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை முக்கிய செய்திகள்

நாடு முழுவதும் 2500இற்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிப்பு!

  • December 20, 2025
  • 0 Comments

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது. பண்டிகை காலத்தில் அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய அனைத்து மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக  காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஏஎஸ்பி எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “ஒவ்வொரு தலைமையக தலைமை ஆய்வாளர் அல்லது அந்தந்த காவல் நிலையத்தின் பொறுப்பாளர் அந்தப் பகுதியில் உள்ள  மதத் தலைவர்களுடன் கலந்துரையாடுவார்கள். மேலும் இது […]

உலகம் செய்தி

கார் இருளில் பூத்த ஒளி : 02 வருடத்திற்கு பிறகு கலைக்கட்டிய பெத்லகேம் (Bethlehem)!

  • December 20, 2025
  • 0 Comments

காசாவில் போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில், இயேசு பிறந்ததாக நம்பப்படும் பெத்லகேம் (Bethlehem) நகரில் கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டங்கள் கலைக்கட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெத்லகேம்  தேவாலயத்தில் உள்ள சிறிய குகைக் குழியில் “கிறிஸ்துமஸ் இரவு” என்ற பாரம்பரிய பாடல் இம்முறை ஒலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “கிறிஸ்துமஸ் இரவில், போர் புதைக்கப்படுகிறது, கிறிஸ்துமஸ் இரவில், காதல் பிறக்கிறது” என்று உள்ளூர் பாடகர் குழு ஒவ்வொரு ஆண்டும் நள்ளிரவு வேலையில் பாடுவது வழக்கமான ஒரு நிகழ்வாகும். “சிரமங்கள், இருள் எதுவாக […]

கருத்து & பகுப்பாய்வு செய்தி

ரத்தக் களமாக மாறிய பங்களாதேஷ் – இந்துக்களை இலக்குவைத்து வன்முறை

  • December 20, 2025
  • 0 Comments

பங்களாதேஷில் மாணவர் அரசியல் மீண்டும் ரத்தக் களமாக மாறியுள்ளது. முக்கிய மாணவர் இயக்கத் தலைவரான ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்குப் பின்னர் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து, பல பகுதிகளில் கலவரங்கள் வெடித்துள்ளதால் பங்களாதேஷ் தற்போது கடும் பதற்றமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 12 ஆம் திகதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, டாக்கா-8 தொகுதியில் வேட்பாளராக களமிறங்கிய […]

ஐரோப்பா செய்தி

லண்டனில் 11 வயது சிறுமியை காப்பாற்றிய நாயகன் பெருமிதம்

  • December 20, 2025
  • 0 Comments

லண்டனில் 11 வயது சிறுமியை ஒரு வருடத்திற்கு முன்பு காப்பாற்றிய பாதுகாவலர் அப்துல்லா தனோலி தன்னை ஒரு நாயகனாக நினைத்து பெருமிதம் அடைந்துள்ளார். லண்டனின் லெய்செஸ்டர் சதுக்கத்தில் ஒகஸ்ட் 2024 ஆம் ஆண்டில் நடந்த சம்பவத்தில், TWG கடையில் பணிபுரிந்திருந்த அப்துல்லா, வெளியில் இருந்து வன்கொடுமையான அலறல் சத்தத்தை கேட்டுள்ளார். இதன்போது வெளியே சென்று பார்க்கையில் ருமேனிய நாட்டவர் ஒருவர் அந்த சிறுமியை தலையில் பலமுறை தாக்குதல் மேற்கொள்வதை அப்துல்லா கண்டுள்ளார். அந்த சிறுமியை காப்பாற்ற வேண்டும் […]

ஐரோப்பா

உக்ரைனின் ஒடேசா துறைமுகம் மீது ஏவுகணை தாக்குதல் – 08 பேர் பலி!

  • December 20, 2025
  • 0 Comments

தெற்கு உக்ரைனின் ஒடேசாவில் உள்ள துறைமுக உள்கட்டமைப்பு மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 08 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 27 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைனின் அவசர சேவை தெரிவித்துள்ளது. குறித்த பகுதியில் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் பல வாகனங்கள் தீக்கிரையாகியதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். துறைமுகம் பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக ஒடேசா பிராந்தியத்தின் தலைவர் ஓலே கிப்பர் ( Oleh Kiper) கூறினார். இந்த தாக்குதல் தொடர்பில் ரஷ்யா […]

ஐரோப்பா செய்தி

உக்ரைன் வியூகத்தில் சிக்கிக்கொள்ளும் ஆங்கிலக்கால்வாய் – புலனாய்வாளர்கள் எச்சரிக்கை!

  • December 20, 2025
  • 0 Comments

மத்தியதரைக் கடலில் ரஷ்ய டேங்கர் கப்பல் ஒன்று தாக்கப்பட்டதைத் தொடர்ந்து,  போரின் உச்சத்தில் ஆங்கிலக் கால்வாய் சிக்கிக் கொள்ளக்கூடும் என்ற அச்சம் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்ய எண்ணெய் டேங்கர்களுக்கு எதிரான உக்ரைனின் கடல்-ட்ரோன் தாக்குதல் பிரச்சாரம் இப்போது கருங்கடலுக்கு அப்பாலும்  பரவியுள்ளது. ஓமன் கொடியுடன் கூடிய “நிழல் கடற்படை” கப்பல் நேற்று தாக்கப்பட்டதும் சுட்டிக்காட்டத்தக்கது. இவ்வாறாக அங்கீகரிக்கப்பட்ட டேங்கர் கப்பல்கள்,  கடற் பகுதிகளில் குறிவைக்கப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பால்டிக் […]