உலகம் செய்தி

மியான்மர் இனப்படுகொலை வழக்கை ஜனவரியில் நடத்த ஐ.நாவின் உச்ச நீதிமன்றம் திட்டம்

  • December 20, 2025
  • 0 Comments

மியான்மர்(Myanmar) தனது ரோஹிங்கியா(Rohingya) சமூகத்தினருக்கு எதிராக இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டும் ஒரு வழக்கில் சர்வதேச நீதிமன்றம்(ICJ) அடுத்த மாதம் பொது விசாரணைகளை நடத்தும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முதல் கட்ட விசாரணைகளின் போது ​​இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பின்(OIC) ஆதரவுடன் 2019ல் வழக்கைத் தாக்கல் செய்த காம்பியா(Gambia) ஜனவரி 12 முதல் 15 வரை தனது வாதங்களை முன்வைக்கும். இதனை தொடர்ந்து இனப்படுகொலை செய்ததை மறுத்து வரும் மியான்மர் ஜனவரி 16 […]

இந்தியா செய்தி

மத்தியப் பிரதேசத்தில் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 10 வயது சிறுமி

  • December 20, 2025
  • 0 Comments

மத்தியப் பிரதேசத்தின்(Madhya Pradesh) பெடுல்(Betul) மாவட்டத்தில் 10 வயது சிறுமி ஒருவர் பாடசாலை வேன் வராததால் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 5ம் வகுப்பு படிக்கும் சுரபி யாதவ்(Surabi Yadav), தனது பாடசாலை பையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு சாலையின் நடுவில் அமர்ந்து மூன்று மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக போக்குவரத்துக் கட்டணத்தை சுரபியின் குடும்பத்தினர் செலுத்தத் தவறியதாலும் இதனால் சுரபிக்கான வேன் சேவையை நிறுத்தியதாகவும் பாடசாலை நிர்வாகம் […]

இந்தியா செய்தி

மாணவர் விசாவில் ரஷ்யாவிற்கு சென்ற இரு இந்தியர்களுக்கு நேர்ந்த துயரம்!

  • December 20, 2025
  • 0 Comments

மாணவர் விசாவில் ரஷ்யாவிற்கு பயணம் செய்த இரண்டு இளைஞர்கள் உக்ரைன் போரில் ஈடுபட வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பின்னர் கொல்லப்பட்டதாக அவர்களது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானீரைச் ( Bikaner) சேர்ந்த 22 வயதான அஜய் கோதாரா மற்றும் உத்தரகாண்டைச் சேர்ந்த 30 வயதான ராகேஷ் குமார் மௌரியா (Rakesh Kumar Maurya) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களின் உடல்கள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த இருவரும் மாணவர் விசாவில் […]

உலகம் செய்தி

வங்கதேசத்தில் இந்து நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேர் கைது

  • December 20, 2025
  • 0 Comments

வங்கதேசத்தில்(Bangladesh) இந்து நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால அரசாங்கம் தெரிவித்துள்ளது. மைமென்சிங்(Mymensingh) நகரில் வியாழக்கிழமை கடவுளைப் பற்றி அவதூறாகப் பேசியதாக கூறி 25 வயதான திபு சந்திர தாஸ்(Thibu Chandra Das) ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டு பின்னர் அவரது உடல் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் ஏழு நபர்களை விரைவு நடவடிக்கை பட்டாலியன்(RAB) கைது செய்துள்ளதாக தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்(Mohammad Yunus) தலைமையிலான இடைக்கால அரசு […]

ஐரோப்பா செய்தி

UKவில் குற்றவாளியை கண்டுப்பிடித்து கொடுப்பவர்களுக்கு 20000 பவுண்ட்ஸ் வெகுமதி அறிவிப்பு!

  • December 20, 2025
  • 0 Comments

கடந்த மார்ச் மாதம் வடக்கு லண்டனில் இளைஞர் ஒருவரைக் கொலை செய்த நபரை கண்டுப்பிடித்து கொடுப்பவர்களுக்கு, 20000 பவுண்ட்ஸ் வெகுமதி வழங்கப்படும் என பிரித்தானிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மார்ச் 20 ஆம் திகதி இரவு 8.45 மணிக்கு டோட்டன்ஹாமில் (Tottenham ) உள்ள வேவர்லி (Waverley) சாலையில் 27 வயதான மஹத் அப்தி முகமது (Mahad Abdi Mohamed) என்ற இளைஞர் தலையில் சுடப்பட்ட நிலையில் உயிரிழந்தார். சம்பவத்தை தொடர்ந்து தாக்குதல்தாரி தப்பிச் சென்ற நிலையில் மார்ச் […]

இலங்கை செய்தி

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்- பொதுமக்களின் கருத்து கோரல்

  • December 20, 2025
  • 0 Comments

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாக எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் வழங்குமாறு பொதுமக்களிடம் நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார். புதிய சட்டமூலம் தொடர்பில் ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை விடுத்த அமைச்சர், தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு, மனித உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் புதிய சட்டத்தைக் கொண்டு வருவோம் என தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வாக்குறுதி அளித்திருந்ததைச் […]

செய்தி விளையாட்டு

ஆஷஸ் தொடர் – இங்கிலாந்து அணிக்கு 435 ஓட்ட இலக்கை நிர்ணயித்த ஆஸ்திரேலியா

  • December 20, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி அடிலெய்ட்(Adelaide) மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது. அந்த வகையில், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 91.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 371 ஓட்டங்களை பெற்றது. இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 87.2 […]

உலகம்

போண்டி துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – தாக்குதல்தாரியை எதிர்கொண்ட நபருக்கு 2.5 மில்லியன் பரிசு!

  • December 20, 2025
  • 0 Comments

போண்டி கடற்கரை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் போது தாக்குதல் தாரி ஒருவரை தைரியமாக எதிர்கொண்ட கடை உரிமையாளருக்கு 2.5 மில்லியன் (£1.24 மில்லியன்) ஆஸ்திரேலிய டொலருக்கான காசோலை பரிசாக வழங்கப்பட்டுள்ளது. நேற்று காலை மருத்துவமனையில் வைத்து அவரிடம் இந்த காசோலை கையளிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களில் ஒருவரைத் தாக்குவதற்கு முன்பு, அகமது அல் அகமது என அழைக்கப்படும் நபர் காரின் பின்னால் மறைந்திருந்து தாக்குதல்தாரியை எதிர்கொண்டார். இதனை காட்டும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியிருந்தன. […]

உலகம் செய்தி

பங்களாதேஷில் கும்பல் ஆட்சி நீடிக்கக் கூடாது – சசி தரூர் கண்டனம்

  • December 20, 2025
  • 0 Comments

பங்களாதேஷில் தற்போது இருப்பது போன்ற கும்பல் ஆட்சி நீடிக்கக் கூடாது என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். பாட்னா விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ‘‘இந்தியா, பங்களாதேஷுடன் நல்லுறவை விரும்புகிறது என்பதையும், அங்கு அமைதி பேணப்பட வேண்டும் என்பதையும் நாடாளுமன்ற நிலைக்குழுவும் கூறியுள்ளது. பங்களாதேஷில் பெப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஜனநாயகம் திரும்ப வேண்டும் என்று நாங்கள் […]

ஐரோப்பா

பிரான்ஸ் எல்லையில் புலம்பெயர்ந்தோருக்கும், காவல்துறையினருக்கும் இடையில் மோதல்!

  • December 20, 2025
  • 0 Comments

பிரான்ஸில் நூற்றுக்கணக்கானோர் இன்று காலை ஆங்கிலக்கால்வாயை கடக்க முற்பட்ட  நிலையில் பிரான்ஸ் காவல்துறையினருக்கும், குடியேறிகளுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 700 குடியேறிகள் சிறிய படகில் ஆங்கிலக் கால்வாயை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பிரான்ஸ் காவல்துறையினர் புலம்பெயர்ந்தோர் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தியதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 41000 புலம்பெயர்ந்தோர் சட்டவிரோதமாக ஆங்கிலக் கால்வாயை கடந்துள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உள்துறை அலுவலக செய்தித் தொடர்பாளர் […]