அரசியல் இலங்கை செய்தி

கொழும்பு மாநகர சபையில் என்.பி.பி.க்கு தோல்வி: அடுத்து என்ன?

  • December 23, 2025
  • 0 Comments

கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் அடுத்த முறை நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (23) நடைபெற்றது. இதன்போது கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில் கேள்விகள் எழுப்பட்டன. இவற்றுக்கு பதிலளித்த அமைச்சர் கூறியவை வருமாறு, கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் அதனை மீண்டும் முன்வைக்க […]

இலங்கை செய்தி

அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்த ஜெய்சங்கர்

  • December 23, 2025
  • 0 Comments

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் இடையே அலரி மாளிகையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக ஜெய்சங்கர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். டிட்வா புயல் காரணமாக நாடு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கையின் உயர்மட்டத் தலைவர்களுடன் கலந்துரையாடுவதை நோக்கமாகக் கொண்ட அவரது உத்தியோகப்பூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் ஹரிணியுடனான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, சேதமடைந்த பாலங்களை நிர்மாணித்தல் மற்றும் நாட்டில் விவசாயத் துறையை வலுப்படுத்துவதற்கான […]

உலகம் செய்தி

உக்ரைன் மீது ரஷ்யா பாரிய தாக்குதல் – உலக நாடுகளின் அழுத்தம் போதாது என செலென்ஸ்கி குற்றச்சாட்டு

  • December 23, 2025
  • 0 Comments

ரஷ்யா, உக்ரைன் மீது 600 இற்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 30 ஏவுகணைகளைப் பயன்படுத்தி பாரிய தாக்குதல் மேற்கொண்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் மத்திய சைட்டோமிர் (zhytomyr) பகுதியில் நான்கு வயது குழந்தை உட்பட சுமார் மூவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யா மீது உலக நாடுகள் போதுமான அழுத்தம் கொடுக்கவில்லையென்றும் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸை நெருங்கும் நிலையில், உக்ரைனின் பல பகுதிகளில் அவசர மின் தடைகள் […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் உருவாகும் புதிய நகரம் – ஒரு மில்லியன் மக்கள் வரை வசிக்கலாம்

  • December 23, 2025
  • 0 Comments

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜுக்கு கிழக்கே, ஒரு மில்லியன் மக்கள் வரை வசிக்கக்கூடிய புதிய நகரத்தை உருவாக்கும் யோசனை பகுத்தறிவுடனும் ஆழமான பரிசீலனையுடனும் உருவாக்கப்பட்டதாக திட்டத்தின் முன்னணி கட்டிடக் கலைஞர் தெரிவித்துள்ளார். நியூமார்க்கெட் (Newmarket) மற்றும் சஃபோல்க்கில் (Suffolk) உள்ள ஹேவர்ஹில் (Haverhill) இடையிலான விவசாய நிலத்தில் இந்த புதிய நகரத்தை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ‘ஃபாரஸ்ட் சிட்டி’ (Forest City) என அழைக்கப்படும் இந்தத் திட்டத்தை தொழில்முனைவோர்களான ஷிவ் மாலிக் (Shiv Malik) மற்றும் ஜோசப் ரீவ் (Joseph Reeve) ஆகியோர் […]

உலகம்

ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) கோப்புகள் – ட்ரம்பின் விமர்சனம்!

  • December 23, 2025
  • 0 Comments

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) கோப்புகளில் இடம்பெற்ற  அப்பாவி நபர்களின் படங்கள் அவர்களின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். விருந்துகளில்  எப்ஸ்டீனை சந்தித்த நபர்களைக் கொண்ட படங்களை வெளியிடுவதால் பலர் கோபமடைந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே கோப்புகளை வெளியிடுவதற்கான சட்டத்தை ஆதரித்த ஜனநாயகக் கட்சி பிரதிநிதி ரோ கன்னா (Ro Khanna) மற்றும் குடியரசுக் கட்சி பிரதிநிதி தோமஸ் மாஸி (Thomas Massie) ஆகிய இருவரும், […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கைக்காக பிரதமர் மோடி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு! ஜெய்சங்கர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!!

  • December 23, 2025
  • 0 Comments

இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் பணிகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இன்று (23) நடைபெற்ற சந்திப்பின்போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார். மேற்படி சந்திப்பு இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட விசேட கடிதத்தையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கையளித்தார். டீத்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களின் நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு முயற்சிகளுக்கும், […]

இலங்கை

பாடசாலை மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் (sanitary napkins) வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு!

  • December 23, 2025
  • 0 Comments

பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை வழங்கும் தேசிய திட்டம், 2024 ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் தொடங்கப்பட்டது. இது 2026 ஆம் ஆண்டும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாடசாலை மாணவிகளிடையே மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டம் குறித்த கலந்துரையாடலில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை அறிவித்தார். இது தொடர்பில் பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதாவது, இந்த முயற்சி கிராமப்புற, தோட்ட மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவிகளை […]

இலங்கை

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு விடுமுறை!

  • December 23, 2025
  • 0 Comments

அரசு அங்கீகாரம் பெற்ற சிங்கள மற்றும் தமிழ்ப் பாடசாலைகள் இன்று (23) முதல் 2026 ஜனவரி 04 வரை மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கிடையில், டிசம்பர் 27, 2025 முதல் ஜனவரி 04, 2026 வரை டிசம்பர் விடுமுறைக்காக இஸ்லாமிய பாடசாலைகள்  மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2026 கல்வியாண்டின்  முதலாவது தவணைப் பரீட்சைக்காக அனைத்துப் பாடசாலைகளும் ஜனவரி 05, 2026 திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட உள்ளன.

உலகம் செய்தி

பாகிஸ்தானில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல்!

  • December 23, 2025
  • 0 Comments

வடமேற்கு பாகிஸ்தானில் காவல்துறையினரின் வாகனத்தை குறிவைத்து துப்பாக்கிதாரிகள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 05 அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும், தாக்குதல்தாரிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கைபர் பக்துன்க்வா (Khyber Pakhtunkhwa) மாகாணத்தின் கரக்  (Karak) மாவட்டத்தில், எண்ணெய் மற்றும் எரிவாயு வயல் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளை குறிவைத்தே  மேற்படி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளைக் கொன்ற பிறகு, தாக்குதல் நடத்தியவர்கள் வாகனத்தின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளதாகவும் காவல்துறை தலைவர் நூர் […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்து சிறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் கைதிகள் – பலர் வைத்தியசாலையில்!

  • December 23, 2025
  • 0 Comments

இங்கிலாந்து சிறையில்   பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக  உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பலரின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகாரிகள் தற்போது சட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக அறிவித்துள்ளனர். சிறை பாதுகாப்பு கொள்கை கட்டமைப்பை கைவிட்டதாக குற்றம் சாட்டி இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் நீதித்துறை செயலாளர் டேவிட் லாமிக்கு ( David Lammy) கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த பலரின் நிலை விரைவாக மோசமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன்,  […]