குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்ய அனுமதி!
நாட்டிற்கு வரும் வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்களுக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தற்போதைய எரிபொருள் விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான ஒப்பந்தங்கள் இம்மாத இறுதியில் பூர்த்தி செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சீனாவின் சினோபெக் ஆஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்.எம். பார்க்ஸ் என்ற மூன்று நிறுவனங்களுக்கு இலங்கையில் எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் நுழைவதற்கு […]













