பயனர்களின் தனிப்பட்ட பேச்சை ஒட்டுக்கேட்ட கூகுள்? – சிக்கிய வழக்கை முடிக்க $68 மில்லியன் இழப்பீடு.
கூகுள் நிறுவனம் தனது பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களை ரகசியமாகக் கேட்டதாகத் தொடரப்பட்ட வழக்கை முடிவுக்குக் கொண்டுவர, 68 மில்லியன் டாலர் (சுமார் ₹570 கோடி) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு (Android) மொபைல்களில் இருக்கும் ‘கூகுள் அசிஸ்டெண்ட்’ (Google Assistant), பயனர்கள் அழைக்காத போதும் தானாகவே செயல்படத் தொடங்கி, அவர்களின் ரகசிய உரையாடல்களைப் பதிவு செய்ததாகப் பயனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். “ஹே கூகுள்” (Hey Google) என்று சொல்லாமலேயே, தவறான தூண்டுதலால் (Inadvertent trigger) இந்த மென்பொருள் […]













