இந்தியா செய்தி

ஹைதராபாத்தில் காத்தாடி நூல் வெட்டி 5 வயது சிறுமி மரணம்

5-year-old girl dies after cutting kite string in Hyderabad

தடைசெய்யப்பட்ட சீன மாஞ்சா காத்தாடி நூல் சிக்கி ஹைதராபாத்தின்(Hyderabad) குகட்பள்ளியில்(Kukatpally) 5 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மழலையர் பாடசாலை மாணவியான நிஷ்விகா ஆதித்யா(Nishvika Aditya), தனது தந்தை மற்றும் சகோதரியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நிஷ்விகா ஆதித்யா தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தின் முன் அமர்ந்து பயணம் செய்துள்ளார், அவளுடைய சகோதரி பின்னால் அமர்ந்திருந்துள்ளார்

இந்நிலையில், பயணத்தின் போது கண்ணாடி பூசப்பட்ட கயிறு கழுத்தை வெட்டியதால் அதிக இரத்தப்போக்கு காரணமாக நிஷ்விகா ஆதித்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதற்கு முன்னதாக, குஜராத்தில்(Gujarat) சைக்கிள் ஓட்டிச் சென்ற 8 வயது சிறுவன் காத்தாடி நூல் சிக்கி உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

சூரத்தில் காத்தாடி நூல் சிக்கி 8 வயது சிறுவன் பலி

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி