பிரான்ஸில் இருவரை கொலை செய்த நபர் எடுத்த விபரீத முடிவு
பிரான்ஸில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி மூவர் கொல்லப்பட்டுள்ளனர். பிரான்ஸின் தெற்கு மாவட்டமான Gard இல் உள்ள Saint-Dionisy எனும் சிறு கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சனிக்கிழமை நண்பகல் வேளையில், அங்குள்ள வீடொன்றுக்குச் சென்ற 51 வயதுடைய ஒருவர், அங்கு வசித்த இருவரை சுட்டுக்கொன்றுள்ளார். ரைஃபிள் வகை துப்பாக்கியால் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் இருவரும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக அறிய முடிகிறது. துப்பாக்கிதாரியின் முன்னாள் காதலி ( வயது 27 ) மற்றும் அப்பெண்ணின் புதிய காதலன் ( வயது […]













