இலங்கை

இரவு நேர கொள்கை விகிதத்தை 7.75% விகிதத்தில் பராமரிக்க முடிவு! மத்திய வங்கி அறிவிப்பு!

  • January 28, 2026
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கி அதன் சமீபத்திய நாணயக் கொள்கை வாரியக் கூட்டத்தைத் தொடர்ந்து, இரவு நேர கொள்கை விகிதத்தை (OPR) 7.75% இல் பராமரிக்க முடிவு செய்துள்ளது. வளர்ந்து வரும் முன்னேற்றங்கள், உள்நாட்டு முன்னணி மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் குறித்த கண்ணோட்டத்தைக் கருத்தில் கொண்டு நாணயக் கொள்கை வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளதாக  CBSL குறிப்பிட்டுள்ளது. தற்போதைய பணவியல் கொள்கை நிலைப்பாடு பணவீக்கத்தை 5% என்ற இலக்கை நோக்கி நகர்த்துவதை ஆதரிக்கும் என்று வாரியம் கருதுகிறது. […]

உலகம்

அமெரிக்காவில் ICE முகவர்களை குறைக்க ட்ரம்ப் உறுதி!

  • January 28, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் – மினசோட்டாவில் கூட்டாட்சி குடியேற்றப் படைகளின் “விரிவாக்கத்தைக் குறைப்பதாக” ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்துள்ளார். குடியேற்ற முகவர்களால் இரண்டுபேர் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் எதிர்பலைகள் உருவாகின. இந்நிலையில், ட்ரம்ப் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  இந்த நடவடிக்கை தனது அரசியல் தளத்தினரிடையே ஆதரவைத் தக்கவைத்துக்கொள்வதற்கான பின்வாங்கல் அல்ல என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயமுடன் (Kristi Noem) இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  

பொழுதுபோக்கு

ரவுடி அண்ட் கோ, சித்தார்த் புதிய படம், Rowdy and Co First Look, Siddharth Yogi Babu Movie.

  • January 28, 2026
  • 0 Comments

நடிகர் சித்தார்த் மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு முதல்முறையாக கதையின் நாயகர்களாக இணைந்து நடிக்கும் ‘ரவுடி அண்ட் கோ’ (Rowdy & Co) திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. முற்றிலும் வித்தியாசமான ‘அப்சர்ட் ஹ்யூமர்’ (Absurd Humor) பாணியில் உருவாகியுள்ள இந்த போஸ்டர், வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘டக்கர்’ படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் கார்த்திக் ஜி. கிரிஷ் மற்றும் நடிகர் சித்தார்த் இரண்டாவது முறையாக […]

உலகம்

நிபா வைரஸ் பரவல் – 1700 பேரை பரிசோதனைக்கு உட்படுத்திய தாய்லாந்து!

  • January 28, 2026
  • 0 Comments

நிபா வைரஸ் பரவும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு   1,700 விமானப் பயணிகளைப்  தாய்லாந்து அரசாங்கம் பரிசோனை செய்துள்ளது. அதன்படி, இந்தியாவின் கொல்கத்தாவிலிருந்து பயணம் மேற்கொண்ட 1,700 விமானப் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சோதனை முடிவுகளில் அனைவருக்கும் பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தாய்லாந்தை போலவே இந்தோனேசியா,  மியான்மர், வியட்நாம் மற்றும் சீனா உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் சுகாதார பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளன. இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் இரண்டு பேருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, […]

#GandhiTalks #VijaySethupathi #ArvindSwami #ARRahman #SilentFilm #TamilCinema #GandhiTalksTrailer #MakkalSelvan #TrendingNews #CinemaUpdate பொழுதுபோக்கு

மௌனத்தால் அதிரும் திரை! விஜய் சேதுபதி – அரவிந்த் சாமியின் ‘காந்தி டாக்ஸ்’ டிரெய்லர்!

  • January 28, 2026
  • 0 Comments

இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘காந்தி டோக்ஸ்’ (Gandhi Talks) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் நேற்று (ஜனவரி 27) வெளியானது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் அரவிந்த் சாமி இணைந்து நடித்துள்ள இந்தப் படம், வசனங்களே இல்லாத ஒரு ‘ப்ளாக் கொமடி’ (Black Comedy) மௌனப் படமாக உருவாகியுள்ளது. நேற்று வெளியான சுமார் 2 நிமிடம் 30 விநாடிகள் ஓடும் இந்த டிரெய்லர், படத்தில் இருக்கும் இரண்டு மாறுபட்ட மனிதர்களின் உலகத்தைக் காட்டுகிறது. ஏழ்மையின் […]

இலங்கை

ரணில் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தீர்மானம்!

  • January 28, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் நிறைவடையும் என்றும், மார்ச் மாதத்தில் முறையான குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்படும் என்றும் சட்டமா அதிபர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தார். அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் ரணில் விக்கிரமசிங்க இன்று  நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகினார். இதன்போது சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இந்த சமர்ப்பணத்தை முன்வைத்தார். தொடர்புடைய செய்தி நீதிமன்றில் முன்னிலையானார் ரணில்!

ஐரோப்பா

உக்ரைனின் பயணிகள் ரயில் மீது ட்ரோன் தாக்குதல் – 05 பேர் உயிரிழப்பு!

  • January 28, 2026
  • 0 Comments

உக்ரேனிய பயணிகள் ரயில் மீது ரஷ்யா நேற்று ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ரயிலில் 200இற்கும் அதிகமானோர் பயணித்த நிலையில்,  05 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலை பயங்கரவாத செயல் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) குற்றம் சாட்டியுள்ளார். போரை நிறுத்துவதற்காக அபுதாபியில் இடம்பெறும் அமைதிப் பேச்சுவார்த்தைகளை குறைமதிப்பிற்கு உட்டுபடுத்தும் வகையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

இந்தியா செய்தி

கர்நாடகா முதல்வருடன் நாமல் சந்திப்பு: இரு தரப்பு உறவு குறித்தும் ஆராய்வு!

  • January 28, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, கர்நாடகா Karnataka மாநில முதல்வர் சித்தராமையாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பெங்களூரிலுள்ள முதல்வரின் அதிகாரப்பூர்வ வதிவிடத்தில் இன்று (28) மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் நாமல் ராஜபக்ச வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, “ இந்தியாவின் மிக மூத்த மற்றும் மரியாதைக்குரிய தலைவர்களில் ஒருவரை சந்தித்தது மகிழ்ச்சி. இந்தியா-இலங்கை இருதரப்பு உறவுகள், கர்நாடகாவின் வளர்ச்சி மற்றும் சமூக நல முயற்சிகள் குறித்து […]

செய்தி

உரிய திசையில் பயணிக்கும் இலங்கைப் பொருளாதாரம்: IMF பாராட்டு!

  • January 28, 2026
  • 0 Comments

டித்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் IMF குழு, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் Anura Kumara Dissanayake பேச்சு நடத்தியுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று 28) முற்பகல் மேற்படி சந்திப்பு நடைபெற்றது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 22 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்த IMF பிரதிநிதிகள் குழு, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை நேரில் பார்வையிட்டனர். அனத்தங்களினால் […]

இலங்கை செய்தி

நீதிமன்றில் முன்னிலையானார் ரணில்!

  • January 28, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe இன்று (28) மதியம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் Magistrate’s Court முன்னிலையானார். ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றம் வரும் வழியில் நீதிமன்ற வளாகத்தில் அவரது ஆதரவாளர்கள் கூடி இருந்தனர். அவர்களுக்கு கையசைத்து நன்றி தெரிவித்துவிட்டு தனது சட்டத்தரணிகள் சகிதம் நீதிமன்றம் நோக்கி ரணில் சென்றார். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், தனது பாரியார் பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்கு அரச நிதியை பயன்படுத்தினார் […]