இந்தியா உலகக் கிண்ணத்தை வெல்லும்!!! முரளி கணிப்பு
உலகக் கோப்பை அட்டவணை அறிவிப்பில் பேசிய இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், இந்த ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து வெல்லும் என்று கூறினார். இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போட்டி அட்டவணை மும்பையில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முத்தையா முரளிதரனும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். 10 அணிகள் பங்கேற்கும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ஆம் திகதி முதல் நவம்பர் 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. […]













