அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பெயரில் யாழ் விஜயம் செய்துள்ள மைத்திரி
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிதறுதேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம்(29) காலை நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.சைவ பண்பாட்டுடன் வேட்டி அணிந்து வந்த மைத்திரிபால சிறிசேன சிதறுதேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டார். பின்னர் அவர் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசத்தினை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.ஆரியகுளம் நாகவிகாரைக்கு சென்ற மைத்திரிபால […]













