ஜப்பானில் சிவப்பாக மாறிய ஆற்று நீர் ! பொதுமக்கள் அதிர்ச்சி- அட காரணம் இதுவா?
ஜப்பானில் ஒக்கினாவா ஆற்று நீர் திடீரென செந்நிறமாக மாறியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜப்பான் நாட்டின் ஒக்கினாவா தீவுப்பகுதியில் உள்ள நாகோ நகரில் துறைமுகப் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஆற்று நீரானது திடீரென செந்நிறமாக மாறி காட்சியளித்தது. வழக்கமாக நீல நிறத்தில் தெளிவாக தென்படும் இந்த பகுதி நீரானது செந்நிறமாக மாறியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில் அருகில் உள்ள பீர் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட கசிவு […]













