இலங்கை

மட்டக்களப்பு பிரதேசத்தில் யானை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி!

  • July 8, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் நேற்று(07) மாலை யானை தாக்கி நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். விவேகானந்தபுரம் ஆயிரம்கால் மண்டபம் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தும்பங்கேனி சுரவனையடிஊற்று கிராமத்தை சேர்ந்த 59 வயதுடையை நாகமணி நாராயனபிள்ளை என்ற 4 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். விவேகானந்தபுரம் ஆயிரம்கால் மண்டபத்தில் உள்ள வைரவர் ஆலயத்துக்கு நேற்று மாலை ஆலய வழிபாட்டுக்கு சென்றவரே இவ்வாறு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். […]

பொழுதுபோக்கு

‘எஸ்கே21’ படப்பிடிப்பில் இருந்து ஓய்வு எடுத்த சாய் பல்லவி – வைரலாகும் புகைப்படங்கள்

திரையுலகில் அதிக ரசிகர்களை பெற்ற நடிகை சாய் பல்லவி, தற்போது காஷ்மீரில் தனது நேரத்தை அனுபவித்து வருகிறார். சாய் பல்லவி தற்போது ‘எஸ்கே 21’ படப்பிடிப்பில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்கே21’ படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. தற்போது, தயாரிப்பாளர்கள் காஷ்மீரில் ஒரு நீண்ட ஷெட்யூல் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர். இப்போது, சிவகார்த்திகேயனின் திரைப்படமான ‘மாவீரன்’ படத்தின் ப்ரோமோஷன் வேலைகளால் இடைவேளை எடுத்துள்ளார், இது வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு […]

ஐரோப்பா

நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு : ஐ.நா விசாரணையை கோரும் மொஸ்கோ!

  • July 8, 2023
  • 0 Comments

நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு குறித்து விசாரணை செய்ய ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை ஜூலை 11 அன்று கூட்டுமாறு ரஷ்யா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து  ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த ரஷ்ய அதிகாரி, டிமிட்ரி பாலியன்ஸ்கி தெரிவித்துள்ளார். கூட்டத்திற்கு “சுவாரஸ்யமான ஓரிரு பாரபட்சமற்ற பேச்சாளர்களை” ரஷ்யா அழைக்கும் என்றும் அவர் கூறினார். முன்னதாக இந்த வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை செய்வதில், ஸ்வீடன் மற்றும் பிற நாடுகளை அணுகுவதில் ரஷ்யா தோல்வியடைந்தது. ஸ்வீடன் மற்றும் டென்மார்க்கின் […]

இந்தியா

வன்முறைக் களமாக மாறிய மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்! 10பேர் பலி

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறுகின்றது. ஆனால்  உள்ளாட்சித் தேர்தல் களம் வன்முறைக் களமாக மாறியுள்ளது. தேர்தல்களின் வாக்குப்பதிவின் போது பரவலான வன்முறையால் குறைந்தது பத்து பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், நதியா, முர்ஷிதாபாத் மற்றும் மால்டா மாவட்டங்களில் நடந்த தனித்தனி சம்பவங்களில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மூவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாஜகவும் தங்கள் கட்சியினர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. தேர்தல்களுக்கு வாக்களிக்க மக்கள் வரிசையில் நின்றதால் […]

இலங்கை

சி.டி விக்ரமரட்னவின் பதவிக்காலம் நீட்டிப்பு!

  • July 8, 2023
  • 0 Comments

பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரட்னவின் பதவிக்காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். பொலிஸ்மா அதிபரின் பதவி வெற்றிடம் நிரப்பப்படாமல் இருந்த நிலையில், ஜனாதிபதி 48 மணி நேரத்துக்குள் புதிய பொலிஸ் மா அதிபரை நியமனம் செய்வார் என பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (ஜுலை 07) பாராளுமன்றத்தில் அறிவித்தார். இதற்கமைவாக தற்போது பொலிஸ்மா அதிபரின் பதவிக்காலம் மேலதிகமாக மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

யாருப்பா இது? நம்ம சூரியா? அட ஹீரோ லுக் வந்துடுச்சே…

  • July 8, 2023
  • 0 Comments

நடிகர் சூரி தன்னுடைய 20வது வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். தான் சினிமா ஆசையில் நடிக்கவில்லை என்றும் வறுமை காரணமாகவே சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்து, வாய்ப்புகளை பெற்றதாகவும் அவர் தனது பேட்டியொன்றில் கூறியுள்ளார். இவரது முதல் படம் காதலுக்கு மரியாதை. இந்தப் படத்தில் கூட்டத்தில் ஒருவராகத்தான் நடித்திருந்தார். இந்தப் படம் 1997ம் ஆண்டில் வெளியான நிலையில், தொடர்ந்து இதுபோன்று கூட்டத்தில் ஒருவராகவே சூரியின் கேரக்டர்கள் அமைந்தன. தொடர்ந்து சங்கமம், மறுமலர்ச்சி என அடுத்தடுத்த படங்களில் இதேபோன்ற […]

செய்தி

நுவரெலியாவில் வாக்குவாதம் முற்றியதால் நேர்ந்த விபரீதம்..!

  • July 8, 2023
  • 0 Comments

நுவரெலியா பிரதான நகரில் இன்று காலை இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நுவரெலியா பிரதான நகரில் நடைப்பாதையில் பழங்கள் விற்பனை செய்யும் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் படுகாயமடைந்த நுவரெலியா பம்பரகலை தோட்டத்தை சேர்ந்த 33 வயதுடைய ஆறுமுகம் ஹாரியதாஸ் என்ற நபர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் கத்தியால் குத்திய பழ வியாபாரி தானாகவே நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாக […]

தென் அமெரிக்கா

பிரேஸிலில் இடிந்து வீழ்ந்த அடுக்குமாடி குடியிருப்பு ;8பேர் பலி, ஐவர் மாயம்

  • July 8, 2023
  • 0 Comments

பிரேஸிலின் வடக்கு, கிழக்கு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து வீழ்ந்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.இதில் 8 பேர் உயிரிழந்ததுடன், 5 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பலர் மீட்பு படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இலங்கை

இரு பெண்களுடன் நிர்வாணக் கோலத்தில் பௌத்த பிக்கு : கைது செய்யுமாறு உத்தரவு!

  • July 8, 2023
  • 0 Comments

நவகமுவ பிரதேசத்தில் தேரர் ஒருவரையும்,  இரண்டு பெண்களையும் தாக்கிய நபர்களை கைது செய்யுமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கொழும்பிற்கு அண்மையில் உள்ள விகாரை ஒன்றில் தேரர் ஒருவரும், இரு பெண்களையும் நிர்வாண நிலைக்கு உட்படுத்தி அப்பகுதி மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பிக்கு மற்றும் உடன் இருந்த இருவரை தாக்கியவர்களை கைது […]

ஆசியா

பாக்கிஸ்தானில் ஏற்பட்ட நிலச்சரிவு ; 8 சிறுவர்கள் பலி

  • July 8, 2023
  • 0 Comments

பாக்கிஸ்தானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 குழந்தைகள் உயிரிழந்தனர். பாக்கிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள ஷங்லா மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் கனமழை பெய்தது இந்நிலையில் மணற்பாங்கான பகுதிக்கு அருகில் 12 முதல் 15 வயது மதிக்கத்தக்க 15 சிறுவர்கள் ஆடுகளம் அமைத்து கிர்கெட் விளையாடி வந்துள்ளனர். அப்போது தடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிறுவர்கள் சிக்கியுள்ளனர். இதையடுத்து உள்ளைர் மீட்பு குழுக்கள் மற்றம் ராணுவத்தினர் இணைந்து பல மணிநேர போராட்டத்திற்கு பின் 8 சிறுவர்களை சடலங்களாக […]