இலங்கை

தரமற்ற மருந்து பாவனையால் பறிப்போன ஒன்பது உயிர்கள்!

  • July 8, 2023
  • 0 Comments

தரமற்ற மருந்து பாவனையால் கடந்த மூன்று மாதங்களில், 09 பேர் உயிரிழந்துள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் ரவீந்திர கஹந்த ஆரச்சி  தெரிவித்துள்ளார். சுகாதார துறையை தனியார் மயப்படுத்தவேண்டாம் எனக் கோரிக்கை வைத்துள்ள அவர், நோயாளர்களின் உயிரை பாதுகாக்குமாறும் வலியுறுத்தினார். ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் முறையற்ற சில செயற்பாடுகள் காரணமாக நாட்டுக்கு கொண்டு வரப்படும் மருந்துகள் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த மருந்துகளால் மூன்று மாதங்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். […]

இலங்கை

அதிசொகுசு பேருந்து தீ விபத்து! போலி செய்தியை வெளியிட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பஸ் புத்தளம் பகுதியில் தீ விபத்தில் முழுமையாக எரிந்தமை தொடர்பாக சில ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் விஷமத்தனமான செய்திகளை வெளியிட்டுள்ளதாக விபத்தில் எரிந்த பேருந்தின் உரிமையாளர் தி.துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்கள் உண்மையை அறிந்து செயற்பட வேண்டும் என்பதுடன் தவறான போலி செய்தியை வெளியிட்டவர்களுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் எதிர்வரும் திங்கட்கிழமை முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் […]

ஐரோப்பா

உக்ரைனில் இதுவரை 8700 பேர் கொல்லப்பட்டுள்ளனர்!

  • July 8, 2023
  • 0 Comments

உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 8,700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கையொன்று வெளியாகியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் ஆரம்பித்து இன்றுடன் 500 நாட்களாகுகிறது. இந்நிலையில், போர் தொடங்கியது முதல் இதுவரை நடைபெற்ற மோதல்கள், உயிரிழப்புகள், சேதங்கள் குறித்த தகவல்களை பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின்படி,  மருத்துவ வசதிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மீது 700க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறைந்தது 8,766 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில், […]

ஐரோப்பா

தீவிரமடையும் போர்! லைமன் நகரில் ரஷ்ய ஷெல் தாக்குதலில் 8 பேர் பலி

உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லைமன் நகரில் ரஷ்ய ஷெல் தாக்குதலில் மேலும் 13 பேர் காயமடைந்ததாக உக்ரைனின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீட்புக் குழுவினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிழக்கு டொனெட்ஸ்க் மற்றும் தென்கிழக்கு ஜபோரிஜியா பகுதிகளில் கடந்த மாதம் தொடங்கிய தாக்குதல், தொடர்கிறது. ரஷ்யா அதன் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெடுத்து […]

உலகம்

53 மில்லியன் ரூபாய் மோசடி செய்த இந்திய பிரஜை டெக்சாஸில் கைது!

  • July 8, 2023
  • 0 Comments

கொவிட் நிவாரண நிதிதிட்டத்தில் 53 மில்லியன் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொற்றுநோய் பதிலளிப்பு பொறுப்புக் குழு (PRAC) மேற்கொண்ட விசாரணைகளுக்கு ஏற்ப அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 தொற்றுநோய்களின் போது அறிமுகப்படுத்தப்பட்ட நிதித் திட்டமான Paycheck Protection Program (PPP) திட்டத்தில் இருந்தும் பல்வேறு நிதி நிறுவனங்களிடம் இருந்தும் 53 மில்லியன் ரூபாயை மோசடி செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் டெக்சாஸ், கலிபோர்னியா மற்றும் ஓக்லஹோமா பகுதிகளில் […]

செய்தி பொழுதுபோக்கு

இனிமேல் ஹீரோ தான்… நோ வில்லன்… நடிப்பு இராட்சசன் பகீர் அறிவிப்பு

  • July 8, 2023
  • 0 Comments

மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஃபஹத் பாசில். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் வெரைட்டியான கேரக்டரில் நடித்து வருகிறார். அதேநேரம் தமிழில் கெஸ்ட் ரோல், வில்லன் கேரக்டர்களில் மட்டுமே நடித்துள்ளார். இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பதால், விரைவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம் ஃபஹத். ஃபஹத் பாசில். ஆரம்பத்தில் பல தோல்விப் படங்களில் நடித்து சினிமாவில் இருந்து பிரேக் எடுத்திருந்த ஃபஹத், மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து வெரைட்டியாக மிரட்டி வருகிறார். […]

இலங்கை

இந்தியாவில் இருந்து இலங்கை வரும் கப்பல்! கடற்படை பேச்சாளர்

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி,பேசாலை நடுக்குடா கடற்கரை பகுதியில் நேற்று கரை தட்டிய கப்பல் மற்றும் கொள்கலன் தாங்கி ஆகியவற்றை மீட்டுச் செல்வதற்காக இந்தியாவில் இருந்து கப்பல் ஒன்று இன்று சனிக்கிழமை (8) மாலை வருகை தர உள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். மாலைதீவில் இருந்து இந்தியாவின் தூத்துக்குடி நோக்கி கொள்கலன் தாங்கியை இழுத்துக்கொண்டு வந்த கப்பல் ஒன்று இயந்திர கோளாறு காரணமாக மன்னார் பேசாலை நடுக்குடா பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (7) […]

இலங்கை

கிழக்கு ஆளுநரின் அதிரடி நடவடிக்கை ;24 மணித்தியாலங்களுக்குள் ஆசிரியர் டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம்

  • July 8, 2023
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தில் ஆங்கில உயர்கல்வி ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்துள்ள 48 டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படாதிருந்தமை குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் அவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ள 48 ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு, இன்று(08)கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. 2017ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்து நியமனங்களை பெற்றுக்கொள்ள காத்திருந்த […]

இந்தியா

சட்டமன்றத்தில் ஆபாச படம் பார்த்த விவகாரம் – வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள்

  • July 8, 2023
  • 0 Comments

திரிபுரா மாநில சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த சட்டமன்ற உறுப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டனர். திரிபுரா சட்டமன்றத்தில் பாஜக MLA ஆபாச படம் பார்த்த புகாரில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டனர். திரிபுரா சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் பாஜக MLA ஜாதவ் லாக் நாத் ஆபாச படம் பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது சட்டப்பேரவை தொடங்கிய நாளிலே திப்ரா மோதா கட்சியைச் சேர்ந்த அனிமேஸ் […]

ஆசியா

நேபாளத்தில் மர்மநோய் பரவிவருகிறது – 300 பேர் பாதிப்பு!

  • July 8, 2023
  • 0 Comments

நேபாளத்தின் கலிகோட்டில் 300க்கும் மேற்பட்ட மக்கள் மர்ம நோய் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து கலிகோட் மாவட்டத்தில் வைத்திய நிபுணர்கள் திரண்டுள்ளனர். நோயின் தன்மையை அறிய அவர்கள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. சுகாதார வல்லுநர்கள் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் மர்மமான நோயை விரைவாகக் கண்டறிந்து நிர்வகிப்பதற்கான அவசியத்தை ஆராய்கிறது. இந்த நோயின் அறிகுறிகளாக,  காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி, அடிநா அழற்சி, முகத்தில் தடிப்புகள் மற்றும் மூட்டுகளில் வீக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கூறப்படுகிறது. இது பெண்கள் […]