இலங்கை

மலையகம் 200 நிகழ்வும் நூல் வெளியீடும்

வவுனியாவில் மலையகம் 200 மற்றும் மலையக மக்களின் 200 வருட வரலாற்று நூல் வெளியீடும் இன்று (09) வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்தியாவில இருந்து மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் இரா.சுப்பிரமணியத்தின் மலையக மக்கள் 200 ஆண்டு வரலாறு என்ற நூலும் வெளியிடப்பட்டது. முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.பி. நடராஜா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தமிழ் […]

இலங்கை

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 15பேர் கைது

  • July 9, 2023
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீண்பிடியில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த இரு படகுகளில் வந்த மீனவர்களே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்களும் அவர்கள் பயணித்த இரு படகுகளும் தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை […]

இலங்கை

2023 இல் இதுவரை 150,000 இலங்கையர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றம்

இந்த வருடத்தில் இதுவரை 150,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா கூறுகையில், இந்தக் குழுவில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ளனர் என தெரிவித்த்துள்ளார். இந்த வருட இறுதிக்குள் 300,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார். SLBFE இல் உள்ள புள்ளிவிபரங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பயணிக்கும் பதிவுசெய்யப்பட்ட இலங்கையர்களை மட்டுமே கொண்டிருப்பதாக […]

வட அமெரிக்கா

கனடா – இந்திய தூதரகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள்

  • July 9, 2023
  • 0 Comments

பிரித்தானியாவை தொடர்ந்து கனடாவிலும் இந்திய தேசிய கொடியை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அவமதிப்பு செய்துள்ளனர். பஞ்சாப்பை தலைமையிடமாக கொண்டு தங்களுக்கு காலிஸ்தான் என்ற தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சீக்கியர்கள் இந்தியாவில் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.ஆனால் இந்த கிளர்ச்சி இந்தியாவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு சீக்கியர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மேலும் இந்த கிளர்ச்சிக்கு பிறகு பெரும்பாலான சீக்கியர்கள் அவுஸ்திரேலியா, கனடா மற்றும் பிரித்தானியா போன்ற வெவ்வேறு நாடுகள் குடியேறினர்.இருப்பினும் காலிஸ்தான் இயக்கங்களை சேர்ந்த சில தலைவர்கள் சமீபத்தில் […]

புகைப்பட தொகுப்பு

பிளாஸ்டிக்கால் விலங்குகளுக்கு பாதிப்பு; வவுனியாவில் விழிப்புணர்வு பேரணி

  • July 9, 2023
  • 0 Comments

இந்து பௌத்த சங்கத்தினரின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்றைய தினம் பேரணி ஒன்று  இடம்பெற்றுள்ளது. இந்து பௌத்த சங்கத்தினரின் ஏற்பாட்டில் பொலித்தீன் பாவனையை தடைசெய்வோம் எனும் தொனிப்பொருளில் குறித்த நடைபவனி பேரணியானது நடைபெற்றுள்ளது. பொலித்தீன் பாவனையால் ஏற்படும் தீமைகள் மற்றும் விலங்குகளுக்கு ஏற்படும் தீமைகள் போன்றவற்றை மக்களுக்கு தெளிவூட்டும் விதமாக நடைபவனி முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பூங்கா வீதியில் உள்ள பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு நகர் வழியாக சென்று வவுனியா பேருந்து தரிப்பிடத்தை சென்றடைந்தது. இதன்போது வீதியிலிருந்த பொலித்தீன் உள்ளடங்கிய […]

இலங்கை

வவுனியாவில் இன்று போராளிகளுக்காக திறந்து வைக்கப்பட்ட அலுவலகம்

  • July 9, 2023
  • 0 Comments

போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் முதலாவது அலுவலகமானது இன்றையதினம் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா ஆலடி வீதி – தோணிக்கல் பகுதியில் போராளிகளின் நலன் சார்ந்து அமைக்கப்பட்ட போராளிகள் நலன் புரிச்சங்கத்தின் அலுவலகமானது இன்று (09) காலை 9.30 மணியளவில் அலுவலகத்திற்கான பெயர்ப்பலகை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் திரைநீக்கம் செய்யப்பட்டது. பின்னர் நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தினர்களால் அலுவலகமானது நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த திருவுருவ படங்களுக்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது. முன்னாள் போராளி […]

இந்தியா

மணிப்பூரில் தொடரும் பதற்றம்! பொலிஸார் உட்பட 4 பேர் பலி

மணிப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் ஒரு பொலிஸார் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க 2 மாதங்களுக்கு முன்பு பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு குகி, நாகா உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது கலவரமாக மாறி பலர் வேறு மாநிலங்களில் தஞ்சம் புகுந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். பொதுச் சொத்துக்களும் […]

பொழுதுபோக்கு

கிங் ஆஃப் கோதா வெளியாவதற்கு முன்பே பல கோடி ரூபாய்க்கு விற்பனை

  • July 9, 2023
  • 0 Comments

துல்கர் சல்மான் நடிக்கும் கிங் ஆஃப் கோதா படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனம் பல கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஷபீர், பிரசன்னா, நைலா உஷா, செம்பன் வினோத், கோகுல் சுரேஷ், சம்மி திலகன், ஷாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். கிங் ஆஃப் கோதா படத்தில் ரக்கட் பாயாக கேங்க் ஸ்டராக […]

இலங்கை

சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தனுக்கு ‘தமிழினக் காவலன்’ விருது

  • July 9, 2023
  • 0 Comments

சிவசேனை அமைப்பின் தலைவர் கலாநிதி மறவன் புலவு சச்சிதானந்தனுக்கு ‘தமிழினக் காவலன்’ என்ற சிறப்புப் விருதினை நேற்று சனிக்கிழமை (8) மன்னார் இந்து மக்கள் வழங்கி கௌரவித்தனர். மன்னார் எழுத்தூர் செல்வநகர் அம்மன் ஆலயத்தில் நேற்று (8) இடம்பெற்ற நிகழ்வின் போது குறித்த கௌரவ விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழுக்கும் சைவத்திற்கு அவர் ஆற்றி வரும் பணியை கெளரவிக்கும் முகமாக இவ்விருது வழங்கப்பட்டது.இதன்போது செங்கோலொன்றும் அவருக்கு வழங்கப்பட்டது. இதன்போது சிவசேனை அமைப்பினர், உலக சைவ மகா சபையினர் […]

ஆசியா

அமெரிக்க நிதி மந்திரி தைவான் வருகை ;எல்லையில் கப்பல், விமானங்களை நிறுத்திய சீனா

  • July 9, 2023
  • 0 Comments

தைவானை தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி என்ற நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வரும் சீனா, வேறு எந்த நாடும் தைவானுடன் வர்த்தகம், தூதரக உறவுகளை மேற்கொள்ளக்கூடாது என எச்சரித்துள்ளது. ஆனால் தைவானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்துள்ளது. அடிக்கடி தனது நாட்டின் பிரதிநிதிகளை தைவானுக்கு அனுப்பி தனது ஆதரவை உறுதி செய்து வருகிறது. அந்தவகையில் தற்போது அமெரிக்க நிதி மந்திரி யெல்லன் தைவானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது ரூ.36 ஆயிரம் கோடி மதிப்பிலான துப்பாக்கி, பீரங்கி உள்ளிட்ட […]