இலங்கை

மின் உற்பத்திக்கு நீர் வழங்குவதில் சிக்கல்!

  • August 1, 2023
  • 0 Comments

தற்போது நிலவும் மழையில்லாத காலநிலை காரணமாக சமனல குளத்தின் நீர் கொள்ளளவு குறைந்துள்ளதால் மின்சார உற்பத்தி குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. ஆனால் மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு அவசரமாக கொள்வனவுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கை

அஸ்வெசும திட்டத்தை உடனடியாக அமுல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்!

  • August 1, 2023
  • 0 Comments

அஸ்வெசும சமூக நலப் பயன் திட்டத்தின் கீழ் சலுகைகளை உடனடியாக வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி  நலன்புரிப் பலன்கள் வாரியம் நிவாரணத் திட்டத்திற்கு ஆரம்ப சுற்றில் 1 792,265 பயனாளிகளைத் தேர்வு செய்துள்ளது. மேலும் மேல்முறையீடுகள் அல்லது ஆட்சேபனைகள் எதுவும் பெறப்படாத 1,588,835 பயனாளிகளுக்கு பணம் வழங்கப்படவுள்ளது.

இலங்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்தித்த கோபால் பாக்லே!

  • August 1, 2023
  • 0 Comments

இந்திய உயர்ஸ்தானிகர்  கோபால் பாக்லேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குழு ஒன்று சந்தித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (01.08) காலை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இக்கலந்துரையாடலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவொன்று பிரசன்னமாகியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இந்திய உயர்ஸ்தானிகரின் அழைப்பின் பேரில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதுடன், 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் உள்ளிட்ட பல விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் […]

ஆப்பிரிக்கா

91 குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்த நபர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

  • August 1, 2023
  • 0 Comments

91 குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அவுஸ்ரேலிய குழந்தைகள் நல அதிகாரி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் மீது குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தல், அவர்களை படம்பிடித்து ஆன்லைனில் வெளியிட்டது உட்பட 1,600க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. குறித்த நபர் கடந்த 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

முச்சக்கர வண்டிகளின் கட்டணம் குறித்த அறிவிப்பு!

  • August 1, 2023
  • 0 Comments

எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், முச்சக்கரவண்டிகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்படுமான என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், முச்சக்கர வண்டிக் கட்டணங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் ஊடாக பிரத்தியேகமாக ஒழுங்குபடுத்தப்படும் வரை கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது என முச்சக்கரவண்டி சங்கங்கள் வலியுறுத்துகின்றன. ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலைகள் திருத்தப்படுவதால் முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியாது என முச்சக்கர வண்டி சங்கங்கள் தெரிவித்துள்ளன. நேற்றிரவு (31) மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் திருத்தத்துடன், ஒக்டேன் 92 லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் […]

இலங்கை

யாழ். காரைநகர் முன்னாள் தவிசாளர் மீது தாக்குதல் முயற்சி

  • August 1, 2023
  • 0 Comments

காரைநகர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் மீது தாக்குதல் முயற்சி ஒன்று நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது. காரைநகர் ஆலடி சந்தியில் பிரதேச சபையின் அனுமதியின்றி சட்டவிரோதமாக மீன் சந்தைக் கட்டிடம் ஒன்று அமைக்கப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸாருக்கும் பிரதேச சபை செயலாளருக்கும் முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர் க.பாலச்சந்திரனால் முறைப்பாடு செய்யப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமையால் குறித்த பகுதிக்கு அவரே நேரடியாக நேற்று (31) காலை சென்றார். இதன்போதே காரைநகர் பிரதேச சபை […]

பொழுதுபோக்கு

பிளாக் பாஸ்டர் ஹிட் வெற்றியை கொண்டாடும் “டிடி ரிட்டர்ன்ஸ்” டீம்

  • August 1, 2023
  • 0 Comments

சந்தானம் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் “டிடி ரிட்டர்ன்ஸ்”. இப்படம் காமெடி கலக்கலாக இருக்க நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து வந்தது. இந்நிலையில் டிடி ரிட்டர்ன்ஸ் வெளிவந்த 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ 15 கோடி வசூல் செய்துள்ளதாம். சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களில் மிகப்பெரும் வசூலை கொடுத்த படமாக டிடி ரிட்டர்ன்ஸ் இருக்கும் என்று கூறப்படுகிறது. சந்தனாம் மார்க்கெட் இதன் மூலம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ‘வேலையில்லா […]

மத்திய கிழக்கு

துருக்கியில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து – 7 பேர் பலி, 23 பேர் காயம்

  • August 1, 2023
  • 0 Comments

துருக்கியில் கிழக்கு கார்ஸ் மாகாணத்தின் எர்சுரம்-கார்ஸ் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அங்குள்ள காராகுட் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த 50 மீட்டர் ஆழ பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இதனையடுத்து தகவலின்பேரில் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் 7 பேர் […]

பொழுதுபோக்கு

இளையராஜாவாக மாறப்போகும் தனுஷ்? வைரலாகும் பேட்டி

  • August 1, 2023
  • 0 Comments

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பதை கடந்து பாடகர், எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முக திறமைகொண்டவராக உள்ளார். இந்த நிலையில் நடிகர் தனுஷை இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்கவைக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் பாலிவுட் இயக்குநர் பால்கி. இந்த நிலையில் தனுஷை வைத்து ‘ஷமிதாப்’ என்ற படத்தை இயக்கிய இயக்குநர் பால்கி சமீபத்திய பேட்டியில் கூறியதாவது, “தனுஷ் மிகவும் […]

ஆசியா

சீனாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள காலநிலை – 11 பேர் மரணம் – பலர் மாயம்

  • August 1, 2023
  • 0 Comments

சீன தலைநகர் பெய்ஜிங்கில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில் 27 பேர் காணாமல்போயுள்ளனர். கடந்த சில நாள்களாக சீனாவில் கனமழை பெய்து வருகின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. அங்குள்ள சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பொதுவாக இந்த மாதத்தில் வறன்ட காலநிலை நிலவும். ஆனால், இந்தாண்டு இயல்பை விட மழையின் அளவு அதிகரித்துள்ளது. கனமழை காரணமாக சீனாவின் பல பகுதிகளில் […]