தலைவர் 170-ல் ரஜினிக்கு வேற வில்லனே கிடைக்கலயா? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்….
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ள ரஜினி, அடுத்தடுத்து 2 படங்களில் நடிக்கிறார். அதில், தசெ ஞானவேல் இயக்கும் ‘தலைவர் 170’ படம் குறித்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. அதேபோல், ரஜினிக்கு வில்லனாக டோலிவுட் முன்னணி ஹீரோ நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கிய ஜெயிலர், ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் என இரண்டு படங்களை முடித்துவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இதில் நெல்சனின் ஜெயிலர் வரும் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. […]












