இலங்கை

திருகோணமலையில் பயிற்சியின் போது விபத்துக்குள்ளான விமானம் – இரு வீரர்கள் பலி

  • August 7, 2023
  • 0 Comments

திருகோணமலையில் அமைந்துள்ள சீனக்குடா விமான பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் சற்று முன் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ் விபத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரு விமானப்படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இலங்கை

சீன பெண்ணின் மீது தாக்குதல்: இருவரை கைது செய்த பொலிஸார்

  • August 7, 2023
  • 0 Comments

உடரட்ட மெனிக்கே ரயிலில் பயணித்த சீனப் பெண்ணை தாக்கிவிட்டு, அவரிடமிருந்த அலைபேசியை அபகரிக்க முயன்ற குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு சந்தேகநபரை தேடும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி ஓடும் உடரட்ட மெனிகே ரயிலில் இருந்து அலைபேசியூடாக ஞாயிற்றுக்கிழமை (06) வீடியோ எடுத்துக்கொண்டிருந்த சீனப் பெண்ணை தடியால் தாக்கிய இரு சந்தேக நபர்களை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். லியு குயின் என்ற சீனப் பெண், தனது கணவர் மற்றும் […]

பொழுதுபோக்கு

பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவின் குழந்தைக்கு இப்படி ஒரு நிலையா?

  • August 7, 2023
  • 0 Comments

தமிழில் விஜய் நடிப்பில் வெளியான ‘சச்சின்’ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை  பிபாஷா பாசு. தொடந்து இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, பெங்காலி உள்ளிடம் மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். 44 வயதான இந்த நடிகை கடந்த 2016ஆம் ஆண்டு கரண் சிங்க் குரோவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து ஆறு ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்த இந்த தம்பதிக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து […]

இலங்கை

இலங்கையில் அதிர்ச்சி – மகனை வெட்டிக்கொலை செய்த தந்தை

  • August 7, 2023
  • 0 Comments

குருநாகலில் தந்தைக்கும் அவரது மகனுக்கும் இடையில் நேற்று ஏற்பட்ட மோதலில் தந்தையால் அவரது மகன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நிதிப் பிரச்சினை காரணமாகத் தந்தைக்கும் அவரது மகனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், அது மோதலாக மாறியதையடுத்து இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குருநாகல் – மாஎலிய பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இதன்போது உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் 45 வயதான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை

இலங்கையில் பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை!

  • August 7, 2023
  • 0 Comments

இலங்கையில் சிறார்களிடையே நோய்கள் பரவக்கூடிய அதிக வாய்ப்புகள் உள்ளதாக சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தாய்மார்கள் சிறார்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார். தசைவலி, வாந்திபேதி, தூக்கமின்மை, அதிக தூக்க கலக்கம், மற்றும் பசியின்மை போன்றன ஏற்படக் கூடிய […]

ஆசியா

சிங்கப்பூரில் கோர விபத்து 23 வயது ஊழியர் மரணம்

  • August 7, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் மோட்டார் சைக்கிள் மற்றும் லொரி சம்மந்தப்பட்ட விபத்தில் சிக்கி 23 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். கடந்த 4ஆம் திகதி இரவு, மலேசியாவில் இருந்து அவர் ஜோகூர் சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முஹம்மத் இல்யாஸ் இல்யாசா முஹம்மத் இஸ்மாடி என்ற சிங்கப்பூரர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரின் பின்னால் பயணம் செய்த சிங்கப்பூரர் நூர் சூர்யா எமிலியா முகமது இம்ரான் (22) என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவு 10:30 மணியளவில் ஏற்பட்ட விபத்தை […]

வாழ்வியல்

மனஅழுத்தத்தை குறைக்கும் குங்குமப்பூ

  • August 7, 2023
  • 0 Comments

குங்குமப்பூ மனஅழுத்தத்தை குறைக்கிறது. ஒரு பவுண்டு குங்குமப்பூ மசாலாவை உற்பத்தி செய்ய 75,000 குங்குமப்பூக்கள் தேவைப்படுவதால் தங்க மசாலாவான ‘குங்குமப்பூ’ மிகவும் விலையுயர்ந்த மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். இந்த குங்குமப்பூவில் நம்பமுடியாத ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இயற்கையான மன அழுத்தத்தை குறைக்கிறது? குங்குமப்பூ மன அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குங்குமப்பூவில் குரோசின், சஃப்ரானல் மற்றும் பிக்ரோக்ரோசின் உள்ளிட்ட உயிர்வேதியியல் சேர்மங்கள் உள்ளன. இந்த கலவைகள் மூளையில் உள்ள சில நரம்புகளுக்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்குகிறது. […]

ஐரோப்பா

ஜெர்மனியில் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம்

  • August 7, 2023
  • 0 Comments

ஜெர்மனிய நாட்டில் அகதி கோரிக்கை சிக்கல் அடைந்து வரும் நிலையில் நாடு கடத்தல் நடவடிக்கை தீவிர நிலைக்கு செல்வதாக செய்தி வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் அதிகரித்து வரும் அகதிகளின் எண்ணிக்கை காரணமாக ஜெர்மனியின் அதிதீவிரவாத வலது சாரி கட்சியான A F T கட்சியானது மக்களிடையே தற்பொழுது மிகவும் செல்வாக்குள்ள கட்சியாக வளர்ந்து வருகின்றது. இந்நிலையில் ஜெர்மனியின் சமஷ்டி உள் ஊர் ஆட்சி அமைச்சர் நான்சி ஃவேசர் அவர்கள் ஜெர்மன் நாட்டில் அகதி விண்ணப்பத்தை மேற்கொண்டு இவ்வாறு அகதி […]

வட அமெரிக்கா

மஸ்க் – மார்க் இடையேயான சண்டையை X தளத்தில் பார்வையிடலாம்

  • August 7, 2023
  • 0 Comments

டுவிட்டர் எனப்படும் X நிறுவனர் எலோன் மஸ்க்கிற்கும், Meta நிறுவனர் மார்க் ஸக்கர்பர்கிற்கும் இடையே கூண்டுச் சண்டை நடக்கவுள்ளது. அதற்கமைய, இந்த சண்டை X தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று மஸ்க் தெரிவித்தார். இருவரும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு நிதி திரட்டுவதற்காகச் சண்டையிட ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. “நிதி திரட்டுவதற்கு நம்பகமான தளத்தைப் பயன்படுத்த வேண்டும் அல்லவா?” என்று ஸக்கர்பர்க் Threads தளத்தில் மஸ்க்கின் அறிவிப்புக்குப் பதிலளித்தார். மஸ்க் சென்ற வருடம் Twitter தளத்தை நிர்வகிக்க ஆரம்பித்தது முதல் […]

பொழுதுபோக்கு

சூப்பர் ஸ்டார் பற்றி தளபதி விஜய் என்ன கூறினார்? பல உண்மைகளை உடைத்த பிரபலம்

  • August 7, 2023
  • 0 Comments

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில், சரத்குமார் தளபதி விஜய் அவர்கள் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறியதும். ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறிய, காக்கை மற்றும் கழுகு கதையில், காக்கை என்று அவர் குறிப்பிட்டது தளபதி விஜய் அவர்களை தான் என்று கூறி இரு நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையில் ஒரு மிகப்பெரிய வன்மம் எழுந்து வருகிறது என்றுதான் கூற வேண்டும். இந்நிலையில் தளபதி விஜய் அவர்கள், சூப்பர் […]