இலங்கை

சோழன் உலக சாதனை படைத்த பொகவந்தலாவையைச் சேர்ந்த பள்ளி மாணவி

  • August 16, 2023
  • 0 Comments

மனித உடலின் உள் உறுப்புகள் 423 இன் பெயர்களை 4 நிமிடங்களில் கூறி உலகின் அதிக ஞாபகத் திறன் கொண்ட பொகவந்தலாவையைச் சேர்ந்த பள்ளி மாணவி 8 வயது கனிஷிகா சோழன் உலக சாதனை படைத்துள்ளார். பொகவந்தலாவையைச் சேர்ந்த சங்கரதாஸ் மற்றும் பாமினி தம்பதிகளின் மகள் கனிஷிகா. பொகவந்தலாவை ஹோலி ரோசரி மகா வித்தியாலயத்தில் 2ஆம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார். தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கு […]

பொழுதுபோக்கு

முதன்முறையாக இரட்டை வேடத்தில் கலக்க தயாராகும் அதர்வா

  • August 16, 2023
  • 0 Comments

ஜீவா ஷங்கர் இயக்கத்தில் நடிகர் அதர்வா, முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாக சமீபத்தில் தெரிவித்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 2023 இல் தொடங்கப்பட்டது, இதன் படப்பிடிப்புதற்போது ராமேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது. ஜீவா ஷங்கர் இயக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் அதர்வா முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். ஒரு தேசிய நாளிதழுக்கு பேட்டியளித்த அதர்வா, இந்த படம் குறித்து முதலில் தனக்கு சந்தேகம் இருந்ததாகவும், இது எனக்கு ஒரு நல்ல சவாலை கொடுத்தது. அதன் பிறகே […]

உலகம்

அதிகரித்து வரும் வெப்பநிலை குறித்து நாசா வெளியிட்டுள்ள செய்தி!

  • August 16, 2023
  • 0 Comments

கடந்த ஜூலை மாதம் மிகவும் வெப்பமான மாதமாக பதிவாகியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. உலக வெப்பநிலையைப் பொறுத்தவரை 1980ம் ஆண்டுக்கு பிறகு கடந்த ஜூலை மாதம் ஏனைய ஆண்டுகளின் ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிக வெப்பநிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்கா முழுவதும் எரியும் காட்டுத் தீ சூறாவளி மற்றும் வெப்ப அலைகள் என்பன புவி வெப்பமடைதலை அதிகரித்துள்ளதாக விஞானிகள் தெரிவித்துள்ளனர். மனிதனால் ஏற்படும் ஒவ்வொரு மாற்றங்களும் காலநிலை மாற்றத்தின் அனைத்து விளைவுகளிலும் ஆதிக்கம் செலுத்துவதாக அவர் மேலும் […]

ஆசியா

மியான்மர் சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு…

  • August 16, 2023
  • 0 Comments

மியான்மர் நாட்டில் ஜேட் என்ற கனிமத்தை பிரித்தெடுப்பது பரவலாக மேற்கொள்ளப்படும் தொழில் ஆகும். அதன்படி கச்சின் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியானார்கள். 8 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நிலச்சரிவில் […]

இலங்கை

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

  • August 16, 2023
  • 0 Comments

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது. இதன்படி நாளை (17.08) முதல் 09 வகையான பொருட்களின் விலைகளை குறைக்க சதொச தீர்மானித்துள்ளது. 400 கிராம் இலங்கை பால் மா பாக்கெட் ஒன்றின் விலை 29 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 970 ரூபாவாகும். அத்துடன் 1 கிலோ சோயா இறைச்சியின் (மொத்த விற்பனை) விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 625 ரூபாவாகும். வெண்டைக்காய்  விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் […]

இலங்கை

குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட 54 இலங்கையர்கள்!

குவைத்தில் தங்கியிருந்த 54 இலங்கையர்களின் விசா காலாவதியானதால் நாடு கடத்தப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் 53 பெண்கள் மற்றும் ஒரு ஆண் கொண்ட குழு இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இன்று குவைத்தில் இருந்து வருகை தந்தவர்களில் பெரும்பாலும் அனுராதபுரத்தில் இருந்து வந்தவர்கள், மேலும் குழுவில் பொலன்னறுவை, மொனராகலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களும் உள்ளனர்.

பொழுதுபோக்கு

விஜய் ஆண்டனியின் புதிய படத்தின் பெயர் வெளியானது

  • August 16, 2023
  • 0 Comments

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிர்னாலினி ரவி நடித்துள்ள புதிய காதல் படத்திற்கு ‘ரோமியோ’ என பெயரிடப்பட்டுள்ளது. கடைசியாக ‘பிச்சைக்காரன் 2’ மற்றும் ‘கோலை’ படங்களில் நடித்த இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளார். விஜய் ஆண்டனி, மிர்னாலினி ரவி நடித்துள்ள ரொமாண்டிக் என்டர்டெய்னருக்கு ‘ரோமியோ’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. டைட்டில் போஸ்டரைப் பகிர்ந்துள்ள விஜய் ஆண்டனி தமிழில், “என்னை ஒரு காதல் ஹீரோவாக பார்க்க விரும்பியவர்களுக்கும், […]

வட அமெரிக்கா

சூப்பர் மார்கெட்டுக்குள் நுழைந்த அழையா விருந்தாளி; அலறியடித்த வாடிக்கையாளர்!

  • August 16, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் பெரிய வணிக வளாகத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் கடைக்குள் ராட்சத பாம்பு ஒன்று புகுந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அங்குள்ள சியோக்ஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் பொருட்கள் வாங்குவதற்காக வாடிக்கையாளர் ஒருவர் சென்றார். அப்போது ஷாப்பிங் செய்வதற்காக கூடையை எடுத்தபோது அதில் சுமார் 6 அடி நீளமுள்ள ராட்சத பாம்பு கிடந்துள்ளது. பாம்பை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் சத்தம் போட்டார். உடனே அங்கு வந்த ஊழியர்கள் வனத்துறை மீட்பு குழுவினருக்கு தகவல் […]

ஆசியா

9 ஜாமீன் மனுக்கள் நிராகரிப்பு- இஸ்லாமாபாத் நீதிமன்றம் அதிரடி

  • August 16, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் மீது ஊழல், கொலை, பயங்கரவாதம், தேச துரோகம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கடந்த மே மாதம் ஊழல் வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராணுவ அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. வன்முறை தொடர்பாக இம்ரான் கான் ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். […]

இலங்கை

இலங்கையின் நிதியமைச்சில் தீவிபத்து!

  • August 16, 2023
  • 0 Comments

கொழும்பில் உள்ள நிதி அமைச்சில் சற்று முன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேதங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். அமைச்சகத்தின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.