இந்தியா

வரலாற்று சாதனை படைத்த இந்தியா : வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஆதித்தியா எல்-01!

  • September 2, 2023
  • 0 Comments

சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. சந்திராயன் விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய பிறகு இந்தியா தனது அடுத்த முயற்சியாக சூரியனை இலக்கு வைத்துள்ளது. இதன்படி ஆதித்தியா  L1  விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 11.50 இற்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. 4.5 ஆண்டுகள் பழமையான நட்சத்திரமான சூரியனை நெருங்க 04 மாதங்கள் எடுக்கும் எனக் கூறப்படுவதுடன், சூரியனை ஆய்வு செய்வதன் மூலம் […]

இலங்கை

வேட்புமனுக்களை இரத்து செய்யும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இல்லை!

  • September 2, 2023
  • 0 Comments

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களை இரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடையாது எனவும், பாராளுமன்றமே இதற்கான இறுதி தீர்மானத்தை எடுக்கும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற பொறுப்புக் கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையான அரச நிர்வாகம் தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுவின் முன்னிலையில் அவர் மேற்படி அறிவித்துள்ளார். தேர்தல் சட்டத்தின் பிரகாரம் வாக்காளர் பதிவு நடவடிக்கைகளை பெப்ரவரி மாதம் ஆரம்பிக்க வேண்டும் எனத் தெரிவித்த […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா முழுவதும் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகம்

  • September 2, 2023
  • 0 Comments

அடுத்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியா முழுவதும் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. அதன்படி, அனைத்து நிறுவனங்களும் ஓட்டுநர் உரிமம், மருத்துவக் காப்பீட்டு அட்டை உள்ளிட்ட அனைத்து அடையாளச் சான்றிதழ்களையும் ஆன்லைனில் சரிபார்க்க வசதி செய்யப்படும். ஓட்டுநர் உரிமம் உட்பட பல்வேறு அடையாள ஆவணங்களின் டிஜிட்டல் சரிபார்ப்பை பல மாநிலங்கள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. முன்மொழியப்பட்ட டிஜிட்டல் அடையாள அட்டை அமைப்பில், புதிய எண் அல்லது அட்டை வழங்கப்படாது மற்றும் ஒரு நபருக்குச் சொந்தமான அனைத்து […]

இலங்கை

வாரிய பொல பகுதியில் கோர விபத்து – தந்தையும், மகளும் உயிரிழப்பு!

  • September 2, 2023
  • 0 Comments

வாரியபொல, மாதம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்துச் சம்பவம் இன்று (02.09) இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் ஒன்று லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்களில் பயணித்த தந்தையும், மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  உயிரிழந்தவர்கள் 48 மற்றும் 16 வயதுடையவர்கள் என  அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தின் பின்னர், லொறியின் சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொழுதுபோக்கு

ஜெயிலர் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா..?

  • September 2, 2023
  • 0 Comments

ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை இந்த படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற செப்டம்பர் 7-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் […]

ஆசியா

பாகிஸ்தான் திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட பதற்றம்!

  • September 2, 2023
  • 0 Comments

பாகிஸ்தானில் நடைபெற்ற திருமண விருந்து நிகழ்ச்சியில் உறவினர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அங்கு ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசி சண்டை போட்ட காணொளி ட்விட்டரில் வைரலாகி வருகிறது. கடந்த 24ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருமணத்திற்கு வந்தவர்கள் மேசைகளில் அமர்ந்து விருந்து உணவை உட்கொள்வதில் இருந்து காணொளி ஆரம்பமாகின்றது. சிறிது நேரத்தில் உறவினர்களுக்கு இடையே தகராறு ஏற்படுகிறது. உடனே ஒருவரையொருவர் தாக்குகிறார்கள். பின்னர் சண்டை தீவிரமாகி ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசி தாக்கும் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

வாழ்க்கையை எளிதாக்கும் 5 புதிய WhatsApp அம்சங்கள்

  • September 2, 2023
  • 0 Comments

உலகின் மிகவும் பிரபலமான உடனடி செய்தியிடல் தளங்களில் ஒன்றான WhatsApp அடிக்கடி புதிய அம்சங்களை வெளியிடுகிறது. இவற்றில் சில மிகவும் தேவையான வாழ்க்கைத் தர மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் HD-ல் புகைப்படங்களை அனுப்புவது முதல் குழுக்களில் டிஸ்கார்ட் போன்ற குரல் சாட்டிங் வரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உங்கள் ஒட்டுமொத்த அனுபவத்தையும் மேம்படுத்தும். வீடியோ அழைப்புகளில் திரைப் பகிர்வு இந்த மாத தொடக்கத்தில், Meta CEO Mark Zuckerberg வீடியோ அழைப்பின் போது திரையைப் பகிரும் […]

இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கை மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

  • September 2, 2023
  • 0 Comments

இலங்கையில் அனைத்து மக்களினதும் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் இலக்கை அடைவதற்காக சமூக நீர்வழங்கல் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இதனை தெரிவித்தார். அந்தவகையில், நாடளாவிய ரீதியில் குடிநீர்த் தேவையில் 62% சதவீதத்தைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மொத்த குடிநீர்த் தேவையில் 85% சதவீத நீர் வழங்கல் இலக்கைப் பூர்த்தி செய்வதற்கு அமைச்சு செயற்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். தற்போது நிலவும் பொருளாதார […]

செய்தி

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்திய -பாகிஸ்தான் போட்டி இன்று

  • September 2, 2023
  • 0 Comments

ஆசியக் கிண்ணக் கிரிக்கட் தொடரில் கண்டி – பல்லேகலையில் இன்று இடம்பெறவுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கிரிக்கட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஷஸ் கிண்ண டெஸ்ட் கிரிக்கட் தொடருக்கு இணையாக உலக கிரிக்கட் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றாக இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி திகழ்கின்றது. இறுதி ஆட்டத்துக்கு இணையான பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள இந்த போட்டி, இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. உபாதையில் இருந்து குணமடைந்து […]

ஐரோப்பா

பிரித்தானியாவின் பெரும் பணக்காரர் காலமானார்

  • September 2, 2023
  • 0 Comments

பிரித்தானியாவின் பெரும் பணக்காரரான எகிப்து தொழிலதிபர் மொஹமட் அல் ஃபயீத் கடந்த 30ஆம் திகதி காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 94 என தெரிவிக்கப்பட்டுள்ளது. அலெக்ஸாண்டிரியாவின் தெருக்களில் பானங்கள் விற்பனை செய்வதில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பின்னர் பிரித்தானியாவின் பணக்காரர் ஆனார். ஃபுல்ஹாம் கால்பந்து கிளப்பின் முன்னாள் உரிமையாளராக முகமது அல் ஃபயீத் நன்கு அறியப்பட்டவர். எவ்வாறாயினும், அவர் கடந்த 30ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.