அறிவியல் & தொழில்நுட்பம்

வாழ்க்கையை எளிதாக்கும் 5 புதிய WhatsApp அம்சங்கள்

உலகின் மிகவும் பிரபலமான உடனடி செய்தியிடல் தளங்களில் ஒன்றான WhatsApp அடிக்கடி புதிய அம்சங்களை வெளியிடுகிறது. இவற்றில் சில மிகவும் தேவையான வாழ்க்கைத் தர மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் HD-ல் புகைப்படங்களை அனுப்புவது முதல் குழுக்களில் டிஸ்கார்ட் போன்ற குரல் சாட்டிங் வரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உங்கள் ஒட்டுமொத்த அனுபவத்தையும் மேம்படுத்தும்.

வீடியோ அழைப்புகளில் திரைப் பகிர்வு

இந்த மாத தொடக்கத்தில், Meta CEO Mark Zuckerberg வீடியோ அழைப்பின் போது திரையைப் பகிரும் அம்சத்தை அறிவித்தார். புதிய அம்சத்தைப் பயன்படுத்தி, பயனர்கள் எந்த பிளாட்ஃபார்மில் இருந்தாலும் தங்கள் ஸ்கீரினை மற்றவர்களுடன் எளிதாகப் பகிரலாம். உங்கள் திரையில் ஏதேனும் ஒன்றைக் காட்ட விரும்பினால், Google Meet, Zoom, Discord அல்லது Skype போன்ற ஆப்ஸை நாட விரும்பாதவர்கள் இனி வாட்ஸ்அப் மூலம் இதனை செய்வது மிகவும் எளிது. வாட்ஸ்அப்பில் உங்கள் திரையைப் பகிர, ஒரு நபர் அல்லது நபர்களுடன் வீடியோ அழைப்பைத் தொடங்கி, திரையின் அடிப்பகுதியில் தோன்றும் ‘share’ ஐகானைத் கிளிக் செய்யவும். உங்கள் ஸ்கிரீனை பதிவுசெய்ய செயலிக்கு அனுமதி அளித்தவுடன், அழைப்பில் உள்ள அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் அது தெரியும்.

உயர்தர புகைப்படங்களை அனுப்பவும்

குறுஞ்செய்தி அனுப்புவதற்கு கோடிக்கணகானோர் பயன்படுத்தும் வாட்ஸ்அப், சமீப காலம் வரை, எச்டியில் படங்களைப் பகிர யூசர்களை அனுமதிக்கவில்லை. அதிக குவாலிட்டி கொண்ட புகைப்படங்களை அனுப்ப பயனர்கள் மூன்றாம் தரப்பு செயலிகளை நம்பியிருக்க வேண்டியிருந்தது. இது மிகவும் வெறுப்பாக இருந்தது. ஆனால் சமீபத்திய அப்டேட்டில், வாட்ஸ்அப் HD படங்களை அனுப்புவதற்கான அம்சத்தை சேர்த்தது. HD வீடியோக்களை அனுப்பும் விருப்பத்தை விரைவில் அறிமுகப்படுத்துவதாகவும் கூறியிருக்கிறது.

குழுக்களில் குரல் அரட்டைகள்

வாட்ஸ்அப் (WhatsApp) அதன் லேட்டஸ்ட் பீட்டா வெர்ஷனில் (Latest beta version) ஒரு புத்தம் புதிய வாய்ஸ் சாட் அம்சத்தை (New voice chat feature) அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு க்ரூப்பில் நடக்கும் ஆடியோ செக்ஷனில் (Audio Session) ஒரே நேரத்தில் 32 பேர் வரை ஈடுபட அனுமதிக்கும் ஒரு அம்சமாகும். வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் மற்றும் அறிமுகம் செய்யப்படப்போகும் புதிய அம்சங்களை பற்றி துல்லியமான தகவல்களை வழங்கும் டபுள்யூஏபீட்டாஇன்ஃபோ (WABetaInfo) வழியாக கிடைத்த தகவலின்படி, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள வாய்ஸ் சாட் அம்சமானது வாட்ஸ்அப் 2.23.16.19 பீட்டா வெர்ஷனில் அணுக கிடைக்கிறது. புதிய அம்சம் நீங்கள் விரும்பும் போதெல்லாம் அழைப்பில் சேர அல்லது வெளியேற அனுமதிக்கிறது.

அனுப்பிய மீடியா தலைப்புகளைத் திருத்தவும்

இனி வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் அனுப்பிய வீடியோ, போட்டோ போன்ற மீடியா கோப்புகளின் கேப்ஷன்களையும் எடிட் ஆப்ஷன் மூலம் திருத்தலாம். வாட்ஸ்அப்பின் புதிய எடிட் மீடியா கேப்ஷன் வசதி அம்சம் அனுப்பிய 15 நிமிடங்களுக்குள் கேப்ஷனில் உள்ள எழுத்துப் பிழைகளை சரிசெய்ய உதவியாக இருக்கும். இந்த அம்சத்தைப் பயன்படுத்த பயனர்கள் தங்கள் மொபைலில் வாட்ஸ்அப் செயலிலை சமீபத்திய வெர்ஷனுக்கு அப்டேட் செய்ய வேண்டும். ஆண்ட்ராய்டு, iOS, டெஸ்க்டாப் பயனர்கள் அனைவரும் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம்.

பெயர்கள் இல்லாமல் குழுக்களை உருவாக்கவும்

வாட்ஸ்ஆப் செயலியில் தற்போது அப்டேட் செய்துள்ளதன்படி குழுவை உருவாக்கும்போது அதற்கு பெயர் குறிப்பிடத் தேவையில்லை. இதன்படி நீங்கள் யாரையெல்லாம் குழுவில் சேர்க்கிறீர்களோ அவர்களது எண்கள் உங்கள் போனில் என்ன பெயரில் சேமிக்கப்பட்டுள்ளதோ அந்த பெயர்கள் தோன்றும். உதாரணமாக ஏ, பி & சி என்று இருக்கும். குழுவில் உள்ளவர்களுக்கு அவர்களின் போனில் உங்கள் பெயர் என்னவோ அந்த பெயர் தெரியும். பெயர் இல்லாத இதுபோன்ற குழுவில் 6 பேரை மட்டுமே இணைக்க முடியும். அவசரமாக ஒரு குழுவை உருவாக்கும்போது பயனர்களுக்கு இந்த வசதி பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் பல நாடுகளில் அப்டேட் ஆகியுள்ள இந்த அம்சம் விரைவில் உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வரும் என்று மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்

You cannot copy content of this page

Skip to content