ஆசியா செய்தி

பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையினரின் வாகனம் அருகே தற்கொலை குண்டு தாக்குதல்

  • September 7, 2023
  • 0 Comments

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் செயல்படாத விமான நிலையத்திற்கு அருகே பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையினரின் வாகனம் அருகே தற்கொலைப் படைத் தீவிரவாதி தன்னைத்தானே வெடிக்கச் செய்துள்ளார், வடக்கு வஜிரிஸ்தானின் எல்லையில் உள்ள பன்னு விமான நிலையம் அருகே வெடிகுண்டுதாரரின் உடலில் சுற்றியிருந்த வெடிபொருட்கள் பெரும் சத்தத்துடன் வெடித்தன. இந்த தாக்குதலில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரி தெரிவித்தார். குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் அப்பகுதி முழுவதும் சுற்றி வளைத்தனர். […]

பொழுதுபோக்கு

மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் அதிரடி கைது… மேலதிக விபரம் உள்ளே

  • September 7, 2023
  • 0 Comments

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருபவர் ரவீந்தர் சந்திரசேகர். இவரும் சீரியல் நடிகை மஹாலட்சுமியும் ஓராண்டுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் 16 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நட்புன்னா என்னான்னு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்து பிரபலமானவர் லிப்ரா ரவீந்தர். ரவீந்தர் – மகாலட்சுமி ஜோடி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ட்ரெண்டாகி வந்தனர். மனைவிக்கு புதிய கார் பரிசு, கோயில்களில் வழிபாடு, ஹனிமூன் […]

செய்தி

யாழில் பல்கலைக்கழக இளைஞர்கள் இருவர் கைது! பின்னணியில் வெளியான காரணம்

வீதியில் செல்வோரிடம் அலைபேசிகளை களவெடுத்த்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருளுக்கு அடிமையாகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் செல்வோரிடம் அலைபேசிகளை அபகரித்து விற்பனை செய்து வந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.. யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெ.மேனன் குழு இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர். […]

உலகம்

நெதர்லாந்தில் இந்திய மாணவியை கொடூரமாக தாக்கிய ஆப்பிரிக்க பெண்கள்!

நெதர்லாந்தில் ஒரு கடையின் முன்பு இந்திய பெண் ஒருவரை ஆப்பிரிக்க பெண் மற்றும் அவருடன் இருந்த பெண்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பலரது கண்டனங்களையும் பெற்று வருகிறது. இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள சரியான காரணம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பொழுதுபோக்கு

ரசிகர்களின் இதயங்களை வென்ற சன் பிக்சர்ஸ்! தொடரும் மக்கள் நலன் பணி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி ஆல் டைம் பிளாக்பஸ்டர் ஆனது என்பது அனைவரும் அறிந்த கதை. பாக்ஸ் ஆபிஸில் விதிவிலக்கான எண்ணிக்கையைப் பெற்ற அதிரடி பொழுதுபோக்கு, இன்று முதல் ஸ்ட்ரீமிங் தளமான பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்கிறது. சன் பிக்சர்ஸ், தயாரிப்பாளர்கள், தலைவருக்கும், இயக்குனர் நெல்சனுக்கும், இசையமைப்பாளர் அனிருத்துக்கும் காசோலைகள் மற்றும் சொகுசு கார்களை பரிசளித்தனர். தற்போது, படத்தின் வசூலில் ஒரு பகுதியை ஆதரவற்றோர் நலனுக்காக ஃபிலிம் ஹவுஸ் […]

பொழுதுபோக்கு

“வயது வந்தவர்களுக்கு மட்டும்”… ஜெய்லரால் ஜவானின் வசூலுக்கு பாரிய சவால்

  • September 7, 2023
  • 0 Comments

ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று OTTயில் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, சுனில், ஜாக்கி ஷெராப், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயக் மற்றும் பலர் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் மெகா பிளாக்பஸ்டர் ஆனது. உலகம் முழுவதும் இன்னும் பல திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், நான்கு வாரங்களில் OTTக்கு வந்துள்ளது, இது ரஜினிகாந்த் […]

ஐரோப்பா

ரஷ்ய சைபர் கும்பலுக்கு தடை விதித்த இங்கிலாந்து!

  • September 7, 2023
  • 0 Comments

ரஷ்ய சைபர் கிரைம் கும்பலுக்கு இங்கிலாந்து தடை விதித்துள்ளது. இதன்படி குற்றக் கும்பலை சேர்ந்த 11 பேர் மீது பிரித்தானியா தடை வித்துள்ளது. ‘இந்த சைபர் குற்றவாளிகள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளாமல்  அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தவும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணம் பறிக்கவும் முயற்சிப்பதாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி தெரிவித்துள்ளார். ‘அவர்களின் அடையாளங்களை அம்பலப்படுத்துவதன் மூலம்   அவர்களின் வணிக மாதிரிகளை சீர்குலைத்து  நிறுவனங்களை குறிவைப்பதை தடுக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். குறித்த சைபர் தாக்குதலில் ஈடுபட்ட குழுவினர் பிரித்தானியாவின் மருத்துவமனைகள் […]

ஐரோப்பா

உக்ரைனின் புதிய பாதுகாப்பு அமைச்சராக ரஸ்டெம் உமெரோவ் நியமனம்

  • September 7, 2023
  • 0 Comments

உக்ரைனின் புதிய பாதுகாப்பு அமைச்சராக ரஸ்டெம் உமெரோவ் நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சரான ஒலெக்சி ரெஸ்னிகோவை மாற்றுவதற்கு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முன்மொழிந்ததைத் தொடர்ந்து, ரஸ்டெம் உமெரோவை நியமிக்க உக்ரைன் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது.இந்நிலையில், ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அவரை புதிய பாதுகாப்பு அமைச்சராக அறிவித்து பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இன்று உக்ரைனின் புதிய பாதுகாப்பு அமைச்சர் ரஸ்டெம் உமெரோவை அறிமுகப்படுத்தினேன். அவரது முன்னுரிமைப் பணிகள் முழு பாதுகாப்புத் துறைக்கான அமைச்சகத்தின் மூலோபாய மற்றும் […]

இலங்கை

கீரி சம்பா அரசிக்கு தட்டுப்பாடு!

  • September 7, 2023
  • 0 Comments

நாடு முழுவதும் பல பிரதேசங்களில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கீரி சம்பா அரிசி இருப்பு வைத்துள்ள சில தொழிலதிபர்கள், கட்டுப்பாட்டு விலையை மீறி 300 முதல் 325 ரூபாய் வரையில் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அத்துடன் அரிசி ஆலை உரிமையாளர்கள்   அதிகபட்ச சில்லறை விலைக்கு ஒத்த விலையில் அரிசியை விற்பனை செய்து வருவதால், அதிக லாபம் கிடைப்பதில்லை என  அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகள் கூறுகின்றனர்.

இலங்கை

உள்நாட்டு இறைவரி  சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்!

  • September 7, 2023
  • 0 Comments

உள்நாட்டு இறைவரி  சட்டமூலம்  45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்த வாக்கெடுப்பு இன்று (07.09) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.  அதன்படி, குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 103 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் கிடைத்துள்ளன. இந்த உத்தேச சட்டமூலம் பல வரிகளை திருத்தியமைப்பதுடன் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு மேலும் அதிகாரமளிக்கும் என தேசிய மக்கள் சக்தியின் (NPP) செயற்பாட்டாளரான சதுரங்க அபேசிங்க உள்ளிட்ட இருவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதனையடுத்து  நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்ட குறித்த சட்டமூலம் அல்லது […]