ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் மோசமான வானிலை – சிட்னி விமான நிலையத்தில் பல விமானங்கள் ரத்து

  • September 8, 2023
  • 0 Comments

மோசமான வானிலை காரணமாக சிட்னி விமான நிலையத்தில் பல உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாகியுள்ளன. அதிக காற்றின் நிலை முக்கிய பருவமழையையே பாதித்துள்ளதே இதற்குக் காரணம். விமான நிலையத்திற்கு வருவதற்கு முன் பயணிகள் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்துடன் சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்நிலையில், பலத்த காற்று வீசியதால், விக்டோரியா மாநிலமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மெல்போர்னின் வடமேற்கு நகர்ப்புற பகுதி மற்றும் கிப்ஸ்லாந்தில் உள்ள பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக பேரிடர் நிவாரண திணைக்களம் தெரிவித்துள்ளது. டாஸ்மேனியா […]

இலங்கை

கொழும்புக்கான ரயில் சேவைகள் தாமதமாகலாம்!

  • September 8, 2023
  • 0 Comments

கொழும்புக்கான ரயில் சேவைகள் தாமதமாகலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கம்பஹாவிற்கும் வெயங்கொடவிற்கும் இடையில் இரவு நேர அஞ்சல் புகையிரதம் ஒன்று தொழிநுட்ப கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக  ரயில் சேவையைனாது ஒரு பாதையில் மட்டும் மத்துப்படுத்தப்பட்டுள்ளதால்,  பிரதான பாதையில் இயங்கும் ரயில் தாமதமாகலாம் என  ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • September 8, 2023
  • 0 Comments

WhatsApp ஆனது தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க், WhatsApp செயலில் எச்டி புகைப்படங்களை அனுப்பமுடியும் என்றும், விரைவில் எச்டி வீடியோவையும் பகிர்ந்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார். அதன்படி, புகைப்படங்களை எச்டியில் அனுப்பும் அம்சம் அறிமுகமானது. இதே போல வீடியோவிலும் அறிமுகமாகும் என்று கூறப்பட்ட நிலையில், அதுவும் அறிமுகமாகியுள்ளது. இனி புகைப்படங்களை மட்டுமல்லாமல் வீடியோவையும் எச்டியில் அனுப்பலாம். இதற்கு முதலில் நீங்கல் அனுப்ப […]

ஆப்பிரிக்கா

மாலியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் : 64 பேர் உயிரிழப்பு!

  • September 8, 2023
  • 0 Comments

வடக்கு மாலியில் நைஜர் ஆற்றில் இராணுவ தளம் மற்றும் பயணிகள் படகு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 64 பேர் உயிரிழந்ததாக மாலி அரசு தெரிவித்துள்ளது. இரண்டு தனித்தனி தாக்குதல்கள் நைஜர் ஆற்றில் உள்ள டிம்புக்டு படகு மற்றும் காவ் பிராந்தியத்தில் உள்ள பாம்பாவில் உள்ள இராணுவ நிலை ஆகியவற்றை குறிவைத்து நேற்று (07.09) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 49 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 15 இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலிற்கு அல்கொய்தாவுடன் இணைந்த அமைப்பு […]

இலங்கை

நடைமுறைக்கு வரும் புதிய ஊழல் ஒழிப்பு சட்டம்!

  • September 8, 2023
  • 0 Comments

புதிய ஊழல் ஒழிப்பு சட்டம் இம்மாதம் 15ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்  விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பான வர்த்தமானி எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் என அவர் கூறியுள்ளார். நீதியமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே நீதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தற்போதுள்ள லஞ்ச ஒழிப்பு சட்டம் பொதுத்துறை மற்றும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், புதிய […]

ஆசியா

சிங்கப்பூர் கப்பலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து – ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

  • September 8, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. மேற்கு சிங்கப்பூர் துறைமுகப் பகுதியில் உள்ள Seraya Buoy பகுதியில் இருந்தகப்பலே இவ்வாறு தீவிபத்துக்குள்ளாகியுள்ளது. இதனை அடுத்து, ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமை மதியம் 1.20 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. PSA மரைன் பைலட் கப்பலின் இயந்திர அறையில் தீ பற்றியதாக PSA Marine அமைப்பு தெரிவித்துள்ளது. பேஸ்புக்கில் பரவி வரும் […]

இலங்கை

கிராம சேவை உத்தியோகத்தர் பதவிகளில் 4000 தொழில்வாய்ப்பு!

  • September 8, 2023
  • 0 Comments

காலியாக உள்ள சுமார் 4000 கிராம சேவை உத்தியோகத்தர் பதவிகளுக்கு விரைவாக புதிய ஆட்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்  அசோக பிரியந்த தெரிவித்தார். நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த மேற்கண்டவாறு தெரிவித்தார். அதனை கையாள்வதற்காக பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க […]

ஐரோப்பா

ஜெர்மனியில் வெளிநாட்டவர்களால் ஏற்பட்டுள்ள ஆபத்து – அதிரடி நடவடிக்கையில் பொலிஸார்

  • September 8, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் சிரியா நாட்டவர்கள் அதிகளவில் வன்முறை சம்பவங்களில் ஈடுப்பட்டு வருகின்றமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் அண்மை காலங்களாக சிரியா நாட்டை சேர்ந்த அகதிகள் குழு நிலை குற்றவியல் சம்பவங்களில் ஈடுப்பட்டு வருகின்றமை அதிகரித்துள்ளதாக தெரியவந்து இருக்கின்றது. இதுவரை காலங்களும் இவ்வாறு குழு நிலை குற்றவியல் சம்பவங்களில் கூடுதலாக லெபபனான் நாட்டை சேர்ந்தவர்கள் ஈடுப்பட்டிருந்துள்ளனர். அண்மை காலங்களாக சிரியா நாட்டை சேர்ந்த அகதிகளும் இவ்வகையான செயற்பாடுகளில் ஈடுப்படுவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஒகஸ்ட் மாதம் எஸன் நகரத்தில் இவ்வகையான […]

இலங்கை

இலங்கையின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைவீழச்சி பதிவாகும்!

  • September 8, 2023
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (08.09) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணம் […]

உலகம்

புதிய கொரோனாவுக்கு எதிராக பயன்பாட்டிற்கு வரவுள்ள புதிய தடுப்புமருந்துகள்

  • September 8, 2023
  • 0 Comments

  புதிய BA.2.86 கொரோனா வகைக்கு எதிராகச் செயல்படக்கூடிய திறனைக் கொண்ட Moderna, Pfizer நிறுவனங்கள் அவற்றின் புதுப்பிக்கப்பட்ட COVID-19 தடுப்புமருந்துகளை அறிவித்துள்ளன. புதிய கொரோனா வகையை உலகச் சுகாதார நிறுவனமும் அமெரிக்கத் தொற்றுநோய்த் தடுப்பு நிலையமும் கண்காணித்து வருகின்றன. Moderna தடுப்புமருந்துக்கு BA.2.86 ரக COVID-19 கிருமியைக் கையாள்வதற்கு 8.7 மடங்கு நோயெதிர்ப்புச் சக்தி உள்ளது. அதே போல Pfizerஇன் புதுப்பிக்கப்பட்ட தடுப்புமருந்துக்கும் நோயெதிர்ப்பு ஆற்றல் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. தற்போது BA.2.86 கொரோனா சுவிட்சர்லந்து,தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல், […]