உலகம்

துருக்கியல் ஒன்பது நாட்களாக குகைக்குள் சிக்கியிருந்த அமெரிக்கர் மீட்பு

  • September 12, 2023
  • 0 Comments

அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் டிக்கி ஒன்பது நாட்களாகத் துருக்கியில் உள்ள ஒரு குகைக்குள் சிக்கியிருந்தார். இந்நிலையில் அவரை அனைத்துலக மீட்புக் குழு இன்று (12) மீட்டது. 40 வயது மார்க் டிக்கி தென் துருக்கியேவில் உள்ள மோர்க்கா குகைக்குள் சென்றார். இதன்போது அவர் குகைக்குள் இருக்கும் சுரங்கத்தில் சுமார் 1120 மீட்டர் ஆழத்தில் விழுந்துவிட்டார். இதனையடுத்து மீட்புப் பணியாளர்கள், சக ஆய்வாளர்கள், மருத்துவக் குழுவினர் என்று 200 பேர் அரும்பாடுபட்டு அவரைக் காப்பாற்றி மருத்துமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளதாக கூறப்படுகின்றது. […]

ஐரோப்பா

ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

  • September 12, 2023
  • 0 Comments

ரஷ்யாவில் விமானம் பறந்து கொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானி வயல்வெளியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. உரல் ஏர்லைன்ஸ் ஒரு ரஷ்ய உள்நாட்டு விமான நிறுவனம். இது யெகாடெரின்பர்க் நகரத்தில் இருந்து செயல்படுகிறது. இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ‘ஏ320’ விமானம் சோச்சியின் கருங்கடல் ரிசார்ட்டில் இருந்து சைபீரியாவின் ஓம்ஸ்க் நகருக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டது. அதில் 167 பேர் பயணித்துள்ளனர். நோவோசிபிர்ஸ்க் பகுதிக்கு வந்தபோது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.. அதை விமானி கவனித்த நிலையில் […]

இலங்கை

மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி!

  • September 12, 2023
  • 0 Comments

உறங்கிக் கொண்டிருந்த நிலையில் நான்கு வயதுச் சிறுமி உயிரிழந்துள்ள சம்பவமொன்று நேற்று (11.09) பதிவாகியுள்ளதாக ஹொரண தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொரண திகேனபுர பகுதியில் வசித்து வந்த சசுகி அனன்யா செசாந்தி என்ற நான்கு வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வழமை போன்று சிறுமி தாயுடன் உறங்கச் சென்றதாகவும், சிறுமியின் சிறுநீர் வெளியேறியதை அவதானித்து, சிறுமியின் உடைகளை மாற்றுவதற்கு தாய் தயாராகும் போது, ​​சிறுமியின் உடல் உயிரற்ற நிலையில் இருப்பதை தாய் அவதானித்ததாகவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் […]

ஐரோப்பா

சுவிட்சர்லாந்தில் தேவாலயத்தில் நடத்த அத்துமீறல்கள் : உண்மைகளை பகிரங்கப்படுத்திய அறிக்கை!

  • September 12, 2023
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் 1000 துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கடந்த ஒரு வருட காலமாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி கடந்த 20 ஆம் நூற்றாண்டில் இருந்து ஏறக்குறைய 1000 துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவ்வாறான நடவடிக்கைகளில் பாதிரியார்களுக்கும் தொடர்பிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சூரிச் பல்கலைக்கழக வரலாற்றாசிரியர்களால் மேற்கொள்ளப்பட் ஆய்வின் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில்,  சமீபத்திய தசாப்தங்களில் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க திருச்சபையை குழப்பிய பாலியல் […]

உலகம்

மொராக்கோ நிலநடுக்கம்: பிறந்த 3 மணிநேரத்தில் குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

  • September 12, 2023
  • 0 Comments

கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 8) இரவு மொராக்கோவில் பேரழிவு தரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதற்ற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கதீஜா என்னும் தாய்க்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தைக்கு இன்னும் பெயர் கூட வைக்கவில்லை.ஆனால் அவளுடைய முதல் வீடு சாலையோரம் அமைக்கப்பட்ட கூடாரம். நிலநடுக்கம் ஏற்பட்டதில் தாயும் மகளும் காயமின்றி இருந்தபோதிலும், மராகேஷில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்து அவ்ர்கள் வெளியேற்றப்பட்டனர். குழந்தை பிறந்து மூன்று மணி நேரம் கழித்து, விரைவான சோதனைக்குப் பிறகு, […]

இலங்கை

யாழ். திருநெல்வேலியில் விடுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட 12 வயது சிறுமி!

  • September 12, 2023
  • 0 Comments

யாழில் விடுதி ஒன்றில் 12 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவ ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், திருநெல்வேலிப் பகுதியில் இன்று முற்பகல் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி தனது பாட்டியுடன் இங்கு வந்ததாகவும் மூன்று நாட்களுக்கு முன்னரே சிறுமி இறந்து விட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு இச் சம்பவம் கொலை என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு

லிபியாவை புரட்டியெடுத்த வெள்ளம் – மீட்கப்பட்ட 1000க்கும் மேற்பட்ட உடல்கள் !

  • September 12, 2023
  • 0 Comments

லிபியா நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 1000க்கு மேற்பட்ட நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாக அந்த நாட்டின் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். வட ஆப்பிரிக்க நாடான லிபியாவை மத்திய தரைக்கடல் புயல் டேனியல் வலிமையாக தாக்கி அங்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.அதிலும் லிபியாவின் கிழக்கு பகுதியில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டு இருந்த Derna நகரம் புயல் மற்றும் வெள்ள பாதிப்பில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ள பாதிப்பில் குறைந்தது 2000 பேர் உயிரிழந்து இருக்கலாம் என அதிகாரிகள் […]

இலங்கை

பசிலுக்கும் – ரணிலுக்கும் இடையில் இரகசிய கலந்துரையாடல்?

  • September 12, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் இந்த கலந்துரையாடல் நீடித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜனவின் உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு பசில் ராஜபக்ஷவினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த கோரிக்கைக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து ஜனாதிபதிக்கும், பசில் […]

இந்தியா

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்! குகி ஸோ இனத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொலை

  • September 12, 2023
  • 0 Comments

மணிப்பூரில் குகி சோ பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து அங்கு மீண்டும் பதற்றம் நிலவுகிறது. மணிப்பூரின் கங்போப்கி மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணியளவில் தடை செய்யப்பட்ட ஆயுதக் குழுக்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குகி சோ பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஆயுதம் தாங்கிய குழு வாகனத்தில் வந்து மேற்கு இம்பால்-காங்போப்கி மாவட்டங்களுக்கு இடையே உள்ள எல்லை கிராமங்களான இரங் மற்றும் கரம் பகுதிகளில் […]

உலகம்

வடகொரியாவை தொடர்ந்து சீனாவுடன் உறவுகளை வலுப்படுத்தும் ரஷ்யா!

  • September 12, 2023
  • 0 Comments

அபிவிருத்தி வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும், ரஷ்யாவுடன் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும் சீனா தயாராக உள்ளது என்று சீனாவின் துணைப் பிரதமர் ஜாங் குவோகிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அறிவிப்புகளை சீனாவின் அரசு செய்தித் தளமான  சின்ஹுவாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்தபோது ஜாங் இவ்வாறு கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவிற்கும் – ரஷ்யாவிற்கும் இடையிலான ஒத்துழைப்புகள் வலுப்பெற்று வருகின்ற நிலையில், இந்த கருத்து வெளியாகியுள்ளது. இதேவேளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் […]