நல்லூர் கந்தனின் வருடாந்திர மகோற்சவம் : நாளை முருகப்பெருமான் திருக்கல்யாணம்
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்தத்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வேல் பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையார் , மற்றும் சண்டேஸ்வரர் ஆகியோர் காலை 07 மணிக்கு ஆலய தீர்த்த கேணிக்கு எழுந்தருளியதை தொடர்ந்து தீர்த்த உற்சவம் இடம்பெற்றது. தீர்த்த திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர். […]













