சமூக ஊடகங்கள் மூலம் நபிகள் நாயகம் மீது இழிவு!!! சவுதியில் இளம் பெண்ணுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
சவூதியில் சமூக ஊடகங்கள் மூலம் நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியதற்காக இளம் பெண் ஒருவரை ஊடக ஒழுங்குமுறை ஆணையம் விசாரணைக்கு அழைத்துள்ளது. எக்ஸ் தளம் மூலம் நபிகள் நாயகத்தை நிந்திக்கும் உள்ளடக்கம் அடங்கிய செய்திகள் மற்றும் வீடியோக்களை இளம் பெண் பகிர்ந்ததால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த பெண் நபிகள் நாயகத்தின் மனைவி கதீஜாவை அவதூறாகப் பேசியது கண்டறியப்பட்டுள்ளது. ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தனது விசாரணையை முடித்ததும், வழக்கு பொது வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்படும். […]













