மறைந்த ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சனின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல்
மறைந்த ஊடகவியலாளரும், கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் 7ஆம் ஆண்டு, நினைவேந்தல் நிகழ்வும், ஞாபகார்த்த ஊடக கற்கை மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் மாலை 3.30 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் அஸ்வின் குறித்த ஞாபகார்த்த உரைகள் இடம்பெற்றதுடன், அஸ்வினின் குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஊடக கற்கைநெறியை தொடரும் மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. ஈழநாடு பத்திரிகையில் தனது ஊடகப்பயணத்தை ஆரம்பித்த […]













