பிரான்சில் லொறிக்குள் கடத்தப்பட்ட ஆறு பெண்கள் மீட்பு
பிரான்சில் லொறியின் பின்புறத்தில் இருந்து ஆறு பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர், பிபிசி அவர்களைக் கண்டுபிடித்து பொலிசாருக்கு எச்சரித்ததை அடுத்து அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
நான்கு வியட்நாமியர்களும் இரண்டு ஈராக்கியர்களும், புலம்பெயர்ந்தவர்கள் என்று கருதப்பட்டு, உள்ளே சிக்கி, பீதியடைந்து மூச்சுவிட சிரமப்பட்டனர். அவர்களில் ஒருவர் லொறியிக்குள் இருந்து பிபிசியிடம் பேசியுள்ளார்.
பின்னர் லொறியை தடுத்து நிறுத்திய காவல்துறையை தொடர்பு கொள்ள பிபிசி உதவியது.
லொறி டிரைவரை பிரான்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான மனித கடத்தல் நடவடிக்கை குறித்தும் அவர்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
(Visited 8 times, 1 visits today)