இலங்கை

வெள்ள அபாய அறிவிப்பு நீக்கப்பட்டது!

  • October 14, 2023
  • 0 Comments

ஆற்றை அண்மித்த தாழ்வான பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய அறிவிப்பு அகற்றப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் கணிசமான அளவு மழை பெய்யாததாலும், தவலம மற்றும் பத்தேகம நீர் அளவீட்டு நிலையங்களில் இருந்து அதிகளவு நீர்மட்டம் பதிவாகியுள்ளதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. அதன்படி கடந்த செப்டம்பர் 28ஆம் திகதி முதல் ஜிங்கங்கையைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நில்வலா ஆற்றின் தாழ்வான பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள […]

மத்திய கிழக்கு

காஸா மீது வான்வழித்தாக்குதல் : 614 குழந்தைகள் பலி!

  • October 14, 2023
  • 0 Comments

காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,900 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 60 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, தாக்குதல்களில் 614 குழந்தைகளும் 370 பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 7500ஐ தாண்டியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, காஸா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது ஹமாஸ் அமைப்பினரால் இஸ்ரேலில் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட குழு ஒன்றின் […]

பொழுதுபோக்கு

கேப்டன் மில்லர் படத்தில் சீக்ரெட் கேரக்டர் பற்றிய செய்தி வெளியானது…

  • October 14, 2023
  • 0 Comments

நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படம் வரும் டிசம்பரில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர போராட்ட காலகட்டத்தை கதைக்களமாக கொண்டுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களை மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இன்னும் ஒரே வாரத்தில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை

யாழ் – துன்னாலை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம்;இளைஞர் ஒருவர் படுகாயம்

  • October 14, 2023
  • 0 Comments

துன்னாலை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துன்னாலை கிழக்குப் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை சுஜீதரன் (31) என்ற இளைஞரே வாள் வெட்டு காயங்களிற்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். முன்பகை காரணமாகவே இந்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தமது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தெரிவித்த நெல்லியடிப் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்தியா விளையாட்டு

இந்தியா -பாகிஸ்தான் இடையே உலகக் கோப்பை போட்டி… ரசிகர்களால் நிறைந்துள்ளஅகமதாபாத்!

  • October 14, 2023
  • 0 Comments

உலகக் கோப்பை தொடரின் மிக முக்கியமான போட்டியாக கருதப்படும் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன் 12.30 மணிக்கு உலகக் கோப்பை தொடருக்கான சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் சங்கர் மகாதேவன், சுக்விந்தர் சிங், அர்ஜித் சிங் ஆகியோர் கலந்துகொண்டு இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளனர். இந்த போட்டியைக் காண அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் என பல […]

பொழுதுபோக்கு

அடேங்கப்பா…. லியோ படத்திற்கு இன்றும் எத்தன பிரச்சினை வரப்போகுதோ….

  • October 14, 2023
  • 0 Comments

ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வெளியாகப் போவதாக அறிவிப்புகள் வெளியான நிலையில், ஐமேக்ஸ் ப்ரீமியர் காட்சிகளும் தற்போது வெளிநாடுகளில் ரத்து செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சில ரசிகர்கள் ஐமேக்ஸ் திரையரங்கில் லியோ வெளியாகாத நிலையில், பணம் ரீஃபண்ட் செய்யப்பட்டு இருக்கும் ஸ்க்ரீன் ஷாட்களையும் பதிவிட்டு வருகின்றனர். தளபதி விஜய் நடிப்பில் இன்னும் 5 நாட்களில் பல பிரச்சினைகளை சந்தித்துளள்து. 1. நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அனிருத் இசையில் லியோ […]

அறிந்திருக்க வேண்டியவை

178 ஆண்டுகளுக்கு பின் நிகழ உள்ள அதிசய சூரிய கிரகணம் – இன்று பார்வையிடலாம்

  • October 14, 2023
  • 0 Comments

சுமார் 178 ஆண்டுகளுக்குப் பின்பு இன்று அதிசய சூரிய கிரகணம் இன்று நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணமானது வானில் அரிய நெருப்பு வளைய சூரிய கிரகணம் போல தோன்றும் என கூறப்படுகிறது. இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் வசிப்பவர்களால் பார்க்க முடியாது. நம்முடைய இந்திய நேரப்படி சனிக்கிழமை இரவு 8:34 மணி முதல் நள்ளிரவு 2:25 மணி வரை இது நிகழவுள்ளது. இந்த கிரகணமானது அமெரிக்காவின் சில பகுதிகளில் தெரியும் என கூறப்படுகிறது. அதன்படி, அமெரிக்காவில் மெக்சிகோ […]

செய்தி

திருகோணமலையில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு

  • October 14, 2023
  • 0 Comments

திருகோணமலை – மட்கோ பகுதியில் மன உளைச்சல் காரணமாக ரயிலுடன் மோதி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திருகோணமலை பாலையூற்று பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு அருகில் இளைஞரொருவர் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் ரயிலுடன் மோதியதாகவும் தெரியவருகிறது. இச் சம்பவத்தில் பாலையூற்று பகுதியைச் சேர்ந்த அபயரத்னகே தரிந்து அசங்க (வயது 23) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது . போதைப்பொருள் பாவனையின் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென அயலவர்கள் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் சம்பவ இடத்தில் இருப்பதுடன் […]

இலங்கை

இலங்கை காலநிலை தொடர்பில் எச்சரிக்கை!

  • October 14, 2023
  • 0 Comments

இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் இன்றையதினம் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் இவ்வாறு எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு, ஊவா, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் […]

இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய யுவதி

  • October 14, 2023
  • 0 Comments

இளம் யுவதியொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டாருக்கு சட்டவிரோதமான முறையில் வீட்டு வேலைக்காக செல்ல முயற்சித்த யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு – மொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளம் யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்படாத முகவர் ஒன்றினால் கட்டாருக்கு சட்டவிரோதமான முறையில் வீட்டு வேலைக்குச் செல்வதற்காக குறித்த யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, விமான நிலைய குடிவரவு அதிகாரிகளால் […]