மத்திய கிழக்கு

தொடக்கியது ஹமாஸ் முடித்து வைக்க போவது இஸ்ரேல் தான் – பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை

  • November 11, 2023
  • 0 Comments

போரை இஸ்ரேல் தொடங்கவில்லை. ஹமாஸ் தான் எங்கள் மீது முதலில் தாக்குதல் நடத்தினர். ஆனால் போரை நாங்களே முடித்து வைப்போம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் மீது காசா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக போர் அறிவித்து ஒரு மாதத்துக்கும் மேலாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் 11 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் […]

இலங்கை

நல்லூர் கந்தசஷ்டி உற்சவ காலத்தையொட்டி ஆலய சுற்று வீதி தடைசெய்யப்படவுள்ளது

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெறவுள்ள கந்தசஷ்டி உற்சவ காலத்தையொட்டி வீதிகள் தடை செய்யப்படவுள்ளன என்று யாழ் மாநகர சபை அறிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் 17 திகதி வரை மற்றும் 19 ஆம் திகதிகளில் பிற்பகல் 5 மணி தொடக்கம் 6 மணிவரையும் 18 ஆம் திகதி சூரன்போரன்று நண்பகல் 12 மணி தொடக்கம் இரவு 7 மணிவரையும் ஆலய சுற்று வீதி தடைசெய்யப்படவுள்ளது. பொது மக்கள் வீதியைப் பயன்படுத்துவோர் மாற்றுப் பாதைகளை […]

மத்திய கிழக்கு

காஸா மோதல்களுக்கு எதிரான நடவடிக்கை தேவை : ஈரான் அதிபர்!

  • November 11, 2023
  • 0 Comments

காஸா பகுதியில் ஏற்பட்டுள்ள போர் மோதல்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார். காஸா பகுதியில் இடம்பெற்று வரும் யுத்த மோதல்கள் தொடர்பில் வார்த்தைகளால் பதில் கூறாமல், நடவடிக்கைகளால் பதிலளிக்க வேண்டிய தேவை இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சவூதி அரேபியாவில் இடம்பெற்றுவரும் அரபு நாட்டு தலைவர்களின் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக தெஹ்ரான் விமான நிலையத்தை வந்தடைந்த போது ஈரான் ஜனாதிபதி இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகம்

அரசியல்வாதியின் துப்பாக்கிச் சூட்டில் ஈரானுக்கு தொடர்பு இருக்கலாம் என ஸ்பெயின் போலீசார் விசாரணை

ஸ்பெயின் முன்னாள் அரசியல்வாதியின் துப்பாக்கிச்சுட்டு சம்பவத்தில் ஈரானிய எதிர்க்கட்சியுடனான அவரது உறவுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று ஸ்பெயின் பொலிசார் ஆராய்ந்து வருகின்றனர். இந்த இணைப்பை ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லை, ஆனால் புலனாய்வாளர்கள் இதை பல சாத்தியமான நோக்கங்களில் ஆராய்ந்து வருகின்றனர். ஸ்பெயின் வலதுசாரி அரசியல்வாதியான அலெஜான்ட்ரோ விடல்-குவாட்ராஸ் மத்திய மாட்ரிட் தெருவில் முகத்தில் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 78 வயதான விடல்-குவாட்ராஸ், ஸ்பெயின் தலைநகரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் பிற்பகல் 1:30 மணியளவில் தாக்கப்பட்டார், […]

பொழுதுபோக்கு

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் பயோகிராபியில் ஆமீர்கான்??

  • November 11, 2023
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் உலகின் அதிரடி ஆட்டக்காரராக இருந்து ஓய்வு பெற்றவர் யுவராஜ் சிங். முதலாவது 20 ஓவர் உலகக் கோப்பை 2007ம் ஆண்டு நடந்த போது இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில் அனைத்து பந்துகளையும் சிக்சருக்குப் பறக்கவிட்டு சாதனை புரிந்தவர் யுவராஜ் சிங். 2000ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட ஆரம்பித்து 2017ல் ஓய்வு பெற்றார். பல ஒரு நாள் போட்டிகள், டி 20 போட்டிகளில் அவருடைய பேட்டிங், பந்து வீச்சு, […]

இலங்கை

இலங்கையில் உணவு பணவீக்கம் அடுத்த ஆண்டு குறைவடையும் என நம்பிக்கை!

  • November 11, 2023
  • 0 Comments

உணவு பணவீக்கம் அடுத்த ஆண்டில் குறைவடையும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும், 2024 ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையை எந்தளவிற்கு கட்டுப்படுத்த முடியும் என்பதை புரிந்துகொள்வதற்காக உணவு உற்பத்தி தொடர்பான அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை

தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க கோரி இன்று (11.11.2023) காலை 9.30 மணியளவில் இராணுவ முகாமிற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இராணுவத்தினரால் பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது குறித்த பதாகையில் இராணுவத்துக்குரிய பிரதேசம் உட்செல்ல தடை என எழுதப்பட்டுள்ளது தமிழ் மக்களின் உரிமைப் போரில் உயிரிழந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர் இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலும் இல்லக் காணியில் பாரிய பிரதேசத்தை இலங்கை […]

இலங்கை

யாழில் 27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் – அனலைதீவில் 27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை அனலைதீவு கரையோர பகுதியில் கைவிடப்பட்ட 18 பொதிகளில் இருந்து குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 69 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா இதன்போது கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது . .

இலங்கை

எரிபொருளை சேமித்து வைப்பதில் சிக்கல் : இலங்கை கோப் குழுவிடம் தெரிவிப்பு‘!

  • November 11, 2023
  • 0 Comments

காஸா பகுதியில் இராணுவ நிலை நிலவுவதால், எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால் பாதுகாப்பாக இருப்பு வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக எரிபொருள் வாங்க போதிய நிதி இல்லாததாலும், எரிபொருளை சேமிப்பதற்கு போதிய வசதிகள் இல்லாததாலும் தற்போது 30 நாட்களுக்கு போதுமான எரிபொருளே இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு கோப் குழுவிடம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.  ஒரு தற்காப்பு எரிபொருள் இருப்பை பராமரிக்க, சுமார் ஐநூறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. […]

இந்தியா

ஒடிசாவில் 11 வயது பழங்குடியின மாணவிக்கு அரசுபள்ளி ஆசிரியர்கள் இருவரால் நேர்ந்த கதி!

  • November 11, 2023
  • 0 Comments

ஒடிசாவில் அரசுப்பள்ளியில் படிக்கும் 11 வயது மாணவியை தலைமை ஆசிரியர் உட்பட 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 11 வயது பழங்குடியின மாணவி ஒருவர் 6ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 9ம் திகதி பள்ளியின் தலைமை ஆசிரியரும் மற்றொரு ஆசிரியரும் மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இதுகுறித்து வீட்டில் கூறக்கூடாது எனவும் கடுமையாக மிரட்டியுள்ளனர். எனவே அச்சத்தில் மாணவி இது […]