ஐரோப்பா

ஐரோப்பிய பைக் சந்தையில் களம் இறங்கும் TVS Motors

TVS Motors நிறுவனம் முதல் முறையாக ஐரோப்பிய பைக் சந்தையில் நேரடியாக ஜனவரி 2024 ஆம் ஆண்டு முதல் களம் இறங்கவுள்ளது. இதற்காக 100 ஆண்டுகள் பழைய நிறுவனமான Emil Frey உடன் இணைந்துள்ளது. அதாவது ஐரோப்பாவில் உள்ள Emil Frey நிறுவனத்துடன் டிவிஎஸ் நிறுவனம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதையடுத்து பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை அடுத்து டிவிஎஸ் மோட்டார் பங்கின் விலை வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் போது […]

இலங்கை

யாழில் வீதியில் கழிவு நீரை ஊற்றியவர்களை மடக்கி பிடித்த பிரதேச மக்கள்

யாழ்ப்பாணம் செம்மணி நாயன்மார்கட்டு பகுதியில் கழிவுநீரை ஊற்றி விட்டு செல்ல முயன்ற வவுசர் வண்டியொன்று அப்பகுதி மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு சுகாதார பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திருநெல்வேலியில் உள்ள நட்சத்திர விடுதியொன்றின் கழிவு நீரை அகற்றும் வவுசர் வண்டியே இவ்வாறு பிடிபட்டது. வழமையாக இவ்வாறு கழிவுகளை ஊற்றி விட்டு செல்லும் வவுசர் வண்டியை அவதானித்த அப்பகுதி மக்கள் இன்று காலை மறைந்திருந்து வவுசரில் வந்தவர்கள் கழிவு நீரை ஊற்றும் போது கையும் களவுமாக பிடித்து சுகாதார பரிசோதகரிடம் ஒப்படைத்துள்ளனர். […]

இலங்கை

மாவீரர் வார நினைவேந்தலை தடை செய்யக்கோரி மானிப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

மாவீரர் வார நினைவேந்தலை மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யக்கோரி மானிப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான கட்டளை நவம்பர் 20ம் திகதி திங்கட்கிழமை வழங்கப்படவுள்ளது. நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நினைவேந்தல் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வலி தென்மேற்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் மற்றும் வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களால் […]

பொழுதுபோக்கு

அதிரடி நாயகி விஜயசாந்தி எடுத்த அதிரடி தீர்மானம்

  • November 17, 2023
  • 0 Comments

பிரபல நடிகையும், முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி காங்கிரசில் இணைந்தார். தெலுங்கானா சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், இவர் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு சினிமாவில் ஆக்ஷன் நாயகியாக வலம் வந்தவர் விஜயசாந்தி. அரசியலில் பயணிக்க தொடங்கிய இவர் 2009ல் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ்., கட்சியில் இணைந்து, மேடக் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி., ஆனார். பின்னர் அவருடனான கருத்து வேறுபாட்டால், 2020ல் அக்கட்சியிலிருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார். தெலுங்கானா சட்டசபை தேர்தல் இம்மாதம் […]

உலகம்

தேர்தலுக்குப் பிறகும் விளாடிமிர் புடின் ரஷ்ய அதிபராக இருப்பார்…!

மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்குப் பிறகும் விளாடிமிர் புடின் ரஷ்ய அதிபராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை என்று கிரெம்ளினின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். “புடின் இன்னும் போட்டியிடுவதற்கான தனது விருப்பத்தை அறிவிக்கவில்லை, ஆனால் அவர் அதைச் செய்வார் என்று நான் உண்மையாக நம்ப விரும்புகிறேன், மேலும் அவர் தேர்தலில் வெற்றி பெறுவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் தொடர்ந்து அதிபராக இருப்பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.என்று அவர் தெரிவித்துள்ளார். 1999 ஆம் […]

இலங்கை

வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் பயிர்செய்கை நடவடிக்கை ஆரம்பம் …!

வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் பயிர்செய்கை நடவடிக்கை வடக்கு மாகாண ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் இரண்டாவது தென்னை முக்கோண வலயத்தில் தென்னம் பிள்ளைகளை நாட்டும் நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டது. கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில், தென்னம் பிள்ளைகள் நடும் செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய , ஒரு இலட்சம் தென்னம் பிள்ளைகளை நடும் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது. வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ். கிளிநொச்சி மாவட்ட […]

இலங்கை

மகளை அடித்து துன்புறுத்திய தந்தைக்கு சிறைதண்டனை விதித்த ஊர்காவற்துறை நீதவான்

  • November 17, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் தனது 4 வயது மகளை அடித்து துன்புறுத்திய நபருக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஊர்காவற்துறை கரம்பொன் பகுதியை சேர்ந்த வாய் பேசாத முடியாத பெண்ணை சுருவிலை சேர்ந்த நபர் ஒருவர் திருமணம் செய்துள்ளார்.அவர்களுக்கு 04 வயதில் மகள் இருந்த நிலையில் கணவன் – மனைவிக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளை அடுத்து மனைவி கணவனை விட்டு பிரிந்து சென்றுள்ளார். அந்நிலையில் கடந்த 2022ஆம் […]

இலங்கை

பிக்மீ சாரதி மீது யாழ். தரிப்பிடமுச்சக்கரவண்டி சாரதிகள் தாக்குதல்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் பிக்மீ சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்ததுடன் தாக்குதலும் நடத்தியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் பலாலி வீதியில் திருநெல்வேலி பழம் வீதி அருகில் இடம்பெற்றுள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்றபோதும் பொலிஸாரும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்ததாக பாதிக்கப்பட்ட பிக்மீ சாரதி கவலை வெளியிட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். மேலும் முச்சக்கரவண்டி சாரதிகள் அதிக கட்டணம் […]

வட அமெரிக்கா

பிரபல ஹிப் ஹாப் பாடகர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள பாடகி காஸ்ஸி

  • November 17, 2023
  • 0 Comments

பிரபல அமெரிக்க பாடகியான காஸ்ஸி, ஹிப் ஹாப் பாடகர் கோம்ப்ஸ் மீது பாலியல் வன்கொடுமை, தன்னை செக்ஸ் அடிமையாகப் பயன்படுத்தியது, உடல்மீதான வன்முறை போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்குத் தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடகி, மாடல், நடிகை என பன்முகம் கொண்ட காஸ்ஸி, ஹிப்-ஹாப் பாடகர் மொகல் சீன் கோம்ப்ஸ் மீது பாலியல் வன்கொடுமை, தன்னை செக்ஸ் அடிமையாகப் பயன்படுத்தியது, உடல்மீதான வன்முறை தாக்குதல் மற்றும் பலவற்றை முன்வைத்து குற்றம்சாட்டியுள்ளார். கஸ்ஸாண்ட்ரா வென்ச்சுரா என்ற இயற்பெயர் கொண்ட […]

இலங்கை

நான் விஞ்ஞானியாகி இலங்கைக்கு பெருமையை தேடித் தருவேன்: யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை மாணவி

”எதிர்காலத்தில் நான் விஞ்ஞானியாகி இலங்கை நாட்டிற்கு பெருமையை தேடித் தருவேன்” என 2023 புலமை பரிசில் பரிட்சையில் 196 பெற்ற யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை மாணவி வனஸ்கா தெரிவித்துள்ளார். இன்று பாடசாலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தன்னை போன்று எதிர்காலத்தில் மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமையை சேர்க்க வேண்டும் எனவும் எதிர்காலத்தில் தான் விஞ்ஞானியாகி இலங்கைக்கு பெருமை சேர்ப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.