இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
இன்ஸ்டாகிராமில் கிரியேட்டர்கள் பதிவேற்றும் ரில்களை நேரடியாக டவுன்லோட் செய்யும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதன் பயனர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் மோகம் மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது. கையில் செல்போனை எடுத்தாலே இன்ஸ்டாகிராமின் உள்ளேதான் அனைவரும் நுழைகிறார்கள். ஏனெனில் நம்மை எப்போதும் என்டர்டெயின்மென்ட் செய்வதற்கு அதில் ரிலீஸ் எனப்படும் சிறிய வகை காணொளிகள் உள்ளது. இவை பார்ப்பதற்கு முற்றிலும் வித்தியாசமாகவும் பொழுதைப் போக்கும் வகையிலும் இருப்பதால் அனைவரும் அவற்றை விரும்பி பார்க்கின்றனர். […]













