மின்சாரத் தடை தொடர்பில் இருவேறு விசாரணைகள்: இலங்கை மின்சார சபை வெளியிட்ட அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் நேற்று ஏற்பட்ட திடீர் மின்வெட்டுக்கான காரணத்தை கண்டறிய இலங்கை மின்சார சபை மற்றும் மின்சக்தி அமைச்சு ஆகிய இரண்டும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். இன்று (10) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் நேற்று (09) ஏற்பட்ட திடீர் மின் தடை தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கொத்மலை முதல் பியகம வரையிலான மின் விநியோக கட்மைப்பில் மின்னல் […]













