புனித குவாடலூப்பே அன்னை ஆலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புனித பண்டங்கள்
ஆசியாவில் முதன் முறையாக பத்து புனிதர்களின் உடற்பாகங்கள் உள்ள திருப்பண்டங்களை உள்ளடக்கிய புராதன பேழையொன்று திருகோணமலை புனித குவாடலூப்பே அன்னை ஆலயத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் திருகோணமலை மறை மாவட்டத்தின் சின்னக்கடை பங்கு என அழைக்கப்படும் புனித குவாடலூப்பே அன்னை ஆலயத்தின் பங்கு குருமனையில் இருந்த இரும்பு பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்தே இவ் புனித பண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என பங்கு குருவானவர் அருட்பணி எஸ்.ஆர்.ஜெயரடணம் கூறியுள்ளார். கண்டெடுக்கப்பட்டுள்ள புனித பண்டங்கள் பத்து ஒரு ஆலயத்தில்,ஒரே இடத்தில் […]













