பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை!
திருமணமாகாத பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 500,000 ரூபா நட்டஈடு மற்றும் குற்றவாளிக்கு 20,000 ரூபா அபராதம் செலுத்துமாறும் நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய இன்று (14) குற்றவாளிக்கு உத்தரவிட்டார். நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய லக்ஷ்மன் சாலிய பண்டார விரசிங்க என்பவருக்கே குறித்த அபராதம் மற்றும் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத் தண்டனையுடன், […]













