International Masters league – அரையிறுதி போட்டியில் இலங்கை அணி தோல்வி
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிபோட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கைபந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ராம்தின் அதிரடி அரைசதத்தின் உதவியுடன் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பிரையன் லாரா 41 ரன்னும், சாட்விக் வால்டன் 31 ரன்னும் […]













