இந்தியா

இந்தியா முழுவதும் 26 இடங்களில் தாக்குதல் – படைகளை முன்நகர்த்தும் பாகிஸ்தான்!

  • May 10, 2025
  • 0 Comments

பாகிஸ்தான் இந்தியா முழுவதும் 26 இடங்களில் தாக்குதல் நடத்தியதாகவும், பாகிஸ்தான் ராணுவம் தனது படைகளை “முன்னோக்கிய பகுதிகளுக்கு” நகர்த்தத் தொடங்கியுள்ளதாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். இன்றைய தினம் (10.05) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “நான் பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளேன், பாகிஸ்தானின் நடவடிக்கைகள்தான் ஆத்திரமூட்டல்களையும் தீவிரப்படுத்தல்களையும் உருவாக்கியுள்ளன,” என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார். பாகிஸ்தான் தரப்பின் இந்த ஆத்திரமூட்டல்கள் மற்றும் தீவிரப்படுத்தல்களுக்கு இந்தியா பொறுப்பான மற்றும் அளவிடப்பட்ட முறையில் பாதுகாத்து எதிர்வினையாற்றியுள்ளது. இன்று காலை […]

இலங்கை

இலங்கை – கொழும்பில் அமைந்துள்ள இரண்டு கட்டடங்களில் தீவிபத்து!

  • May 10, 2025
  • 0 Comments

கொழும்பில் உள்ள வோக்ஷால் தெருவில் அமைந்துள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீயை அணைக்க 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை, ஆனால் மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்தியா

எல்லையில் 03 ஆவது நாளாக நீடிக்கும் பதற்றம் : இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திற்கு ரெட் அலர்ட்!

  • May 10, 2025
  • 0 Comments

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், நேற்று (09.05) நள்ளிரவிற்கு பிறகு ஜம்மு- காஷ்மீர் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. ஆந்திராவை சேரந்த முடவத் முரணி நாயக் என்ற ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். இவர் அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இணைந்துள்ளார். இதற்கிடையில் பாகிஸ்தான் இராணுவம் கடந்த மூன்று நாட்களாக இந்திய எல்லைகளை தாக்கி வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு முதல் பாகிஸ்தான் அத்துமீறி நடத்தி வரும் தாக்குதல்களில் 5 பேர் […]

வட அமெரிக்கா

ட்ரம்பின் வரிவிதிப்புகளுக்கு மத்தியில் சீன அதிகாரிகளை சந்திக்கும் அமெரிக்க கருவூல செயலாளர்!

  • May 10, 2025
  • 0 Comments

ஜனாதிபதி ட்ரம்பின் வரி விபதிப்பு காரணமாக சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ள  நிலையில், அமெரிக்க கருவூல செயலாளரும் அமெரிக்காவின் உயர்மட்ட வர்த்தக பேச்சுவார்த்தையாளரும் இந்த வார இறுதியில் சுவிட்சர்லாந்தில் உயர்மட்ட சீன அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளனர். கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் ஆகியோர் துணைப் பிரதமர் ஹீ லைஃபெங் தலைமையிலான சீனக் குழுவை ஜெனீவாவில் சந்திப்பார்கள். இதன்போது இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் தங்கள் பொருட்களின் மீது விதித்துள்ள […]

ஐரோப்பா

ரஷ்யாவிடம் 30 நாள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் ஐரோப்பிய தலைவர்கள் : கியேவில் சந்திப்பு!

  • May 10, 2025
  • 0 Comments

ரஷ்யா ஒரு மாத கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், நான்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் இன்று (10.05) கியேவில் ஒரு கூட்டு ஆதரவை வெளிப்படுத்த வருகை தந்துள்ளனர். பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் தலைவர்கள் கியேவில் உள்ள ரயில் நிலையத்தில் ஒன்றாக வந்தனர், அங்கு அவர்கள் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விஜயம் நான்கு நாடுகளின் தலைவர்களும் உக்ரைனுக்கு […]

இலங்கை

இலங்கையில் 16 வயது சிறுமியின் மரணத்திற்கு காரணமான ஆசிரியர் – வெளியான உண்மை தகவல்!

  • May 10, 2025
  • 0 Comments

இலங்கையில்  தற்கொலை செய்து கொண்ட கொட்டஹேன பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பம்பலப்பிட்டியில் உள்ள பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். சந்தேகத்திற்குரிய ஆசிரியர் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொட்டஹேனவில் உள்ள கல்போத்த தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தில்ஷி அம்சிகா என்ற 16 வயது மாணவி ஏப்ரல் 29 ஆம் […]

பொழுதுபோக்கு

ரவியின் புது உறவால் கொதித்துப் போன ஆர்த்தி… வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை

  • May 10, 2025
  • 0 Comments

ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரவி, இதனை தொடர்ந்து தனது பெயரை ஜெயம் ரவி என மாற்றிக்கொண்டார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் தனது மனைவி ஆர்த்தியை பிரிய போவதாக ரவி அறிக்கை வெளியிட்டிருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து தனதை பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டார். ஆர்த்தியிடம் இருந்து விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் […]

உலகம்

வான்வெளியை முற்றிலுமாக மூடிய பாகிஸ்தான் – இந்தியாவில் 26 இடங்களில் தாக்குதல்கள்

  • May 10, 2025
  • 0 Comments

இந்தியா-பாகிஸ்தான் மோதல் அதிகரித்து வருகிறது, இதன் விளைவாக, பாகிஸ்தான் தனது வான்வெளியை தற்காலிகமாக முழுவதுமாக மூடியுள்ளது. இன்று அதிகாலை இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள மூன்று விமானப்படை தளங்களை குறிவைத்து பல தாக்குதல்கள் நடத்தப்பட்டதே இதற்குக் காரணம். இதற்கிடையில், இந்தியாவும் நாட்டின் வடக்கு மற்றும் மேற்கில் உள்ள 32 விமான நிலையங்களை 15 ஆம் தேதி வரை மூடியுள்ளது. பாகிஸ்தானில் தாக்குதல் நடக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையில்தான் அது நடந்தது. மேலும், நேற்று இரவு, இந்தியாவில் 26 […]

இலங்கை

இலங்கையில் மர்மமாக உயிரிழந்த 7 வயது சிறுமி

  • May 10, 2025
  • 0 Comments

பசறை பொலிஸ் பிரிவின் உடகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் சுகவீனம் காரணமாக பசறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சிறுமி நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மேலும் சிறுமியை பரிசோதித்த பசறை மருத்துவமனையின் மருத்துவர் மரணம் சந்தேகத்திற்குரியது என்று கூறினார். இதன் விளைவாக, இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் உடகம, பசறை பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஆவார். குறித்த […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

பதற்றத்தை தணிக்குமாறு பாகிஸ்தான் இராணுவத் தளபதிக்கு அமெரிக்கா அறிவுரை

  • May 10, 2025
  • 0 Comments

போர்ப் பதற்றத்தை தணிக்கும் முயற்சிகளை செய்யுமாறு பாகிஸ்தான் ராணுவத் தளபதியிடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையை இந்தியாவுடன் தொடங்க மத்தியஸ்தம் செய்யத் தயாரக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இன்று தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அவர், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தைத் தணிக்க முயற்சிக்குமாறு வலியுறுத்தியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், […]