ஐபிஎல் நிறுத்தம்: எஞ்சிய போட்டிகளை நடத்த இங்கிலாந்து அழைப்பு
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் காரணமாக ஒரு வாரத்திற்கு ஐ.பி.எல். போட்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், எஞ்சிய போட்டிகளை தங்கள் நாட்டில் நடத்திக் கொள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவில் நடந்து வந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையறையின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான 18வது ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. […]













