இன்றைய முக்கிய செய்திகள்

பல தசாப்தங்கள் காணாத மோசமான மோதல் – மனவேதனையை வெளிப்படுத்திய பாகிஸ்தான் மக்கள்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் தொடரும் நிலையில் அது பல தசாப்தங்கள் காணாத மோசமான மோதல் என்று பாகிஸ்தானிய மக்கள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள ஒரு சந்தைக்கு வெளியே மக்களைச் சந்தித்துப் பேசியது சர்வதேச ஊடகத்திடம் மக்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.

“இந்தியாவின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்பதைத் தவிரப் பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை” என கடைக்காரர்களில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது பாதுகாப்பைப் பற்றி கவலையில்லை என்று கூறிய அவர் இந்த மோதல் எப்போது முடியும் என்று யோசிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

எந்தச் சமயத்தினராக இருந்தாலும் இரு நாட்டு மக்களுக்கும் போர் நல்லதல்ல என பாகிஸ்தானியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியா – பாகிஸ்தான் மோதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் வான்வெளிகள் தற்போது திறக்கப்பட்டு வருகின்றது.

விமானப் போக்குவரத்து சீராகும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக பிரித்தானியா செல்ல காத்திருக்கும் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

SR

About Author

You may also like

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கைக்கு இந்தியா வழங்கிய மகிழ்ச்சியான செய்தி – 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

  • October 5, 2024
இலங்கைக்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இந்தியா வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன், இந்திய
இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

2 வாரங்களை சிறப்பாக பயன்படுத்திய அனுரகுமார – எரிக்சொல்ஹெய்ம் பாராட்டு

  • October 5, 2024
இலங்கைக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்கவேண்டும் என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்களாகின்றன