ஆசியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

உலக நாடுகளின் அழிவுக்கு வழிவகுக்கும் பாகிஸ்தான் – பலுசிஸ்தான் விடுதலை படை எச்சரிக்கை

  • May 14, 2025
  • 0 Comments

பாகிஸ்தானின் தீவிரவாத செயல்களை தொடர்ந்து சர்வதேச சமூகம் பொறுத்துக்கொண்டால் அது முழு உலகின் அழிவுக்கும் வழிவகுக்கும் என்று பலூசிஸ்தான் விடுதலை படை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானின் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் தொடர்ந்து சகிப்புத்தன்மை காட்டுவது தெற்காசிய பிராந்தியத்தில் உறுதியற்ற தன்மையை உருவாக்கும் என பிஎல்ஏ செய்தித் தொடர்பாளர் ஜீயந்த் பலூச் தெரிவித்துள்ளார். சர்வதேச பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்கும் பாகிஸ்தான் இருப்பு முழு உலக அழிவுக்கும் விரைவில் வழிவகுக்கும். ஏனெனில், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற அரசு […]

ஐரோப்பா

கிரேக்கத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இஸ்ரேல், லெபனான், துருக்கியிலும் உணரப்பட்ட அதிர்வு

  • May 14, 2025
  • 0 Comments

கிரேக்கத்தில் இன்று அதிகாலை 1 மணியளவில், பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிரேக்கத்தின் ப்ரை பகுதியில், 6.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், எகிப்தின் தலைநகர் கெய்ரோவிலும், இஸ்ரேல், லெபனான், துருக்கி மற்றும் ஜோர்தானிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி புதன்கிழமை அதிகாலை 1:51 குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 78 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்கள் பரவும் அபாயம் தீவிரம்

  • May 14, 2025
  • 0 Comments

இலங்கையில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தானசாலைகளின் பின்னரான காலப்பகுதியில் இந்த அபாயம் அதிகமாக உள்ளது. விசாக பூரணையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும் தானசாலைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தானசாலைகள் நடத்தப்பட்ட பின்னர், வீசப்படும் கழிவுகளால் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா பரவும் அபாயம் உள்ளதால், தானசாலைகளை ஏற்பாடு செய்தவர்கள் இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் […]

வாழ்வியல்

இரவில் வாழைப்பழம் சாப்பிடலாமா? உடலில் ஏற்படும் மாற்றங்கள்

  • May 14, 2025
  • 0 Comments

பிட்னஸ் ஆர்வலர்கள் மற்றும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் என பலர் வாழைப்பழத்தை தங்களது டயட்டில் சேர்த்துக் கொள்வர். இதில் புரதம், வைட்டமின் சத்துக்கள் உள்ளிட்ட பல உறுதி செய்யப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இந்தப் பழத்தில் பைபர், பொட்டாசியம், மக்னீசியம், கால்சிய சத்துக்கள் பல அடங்கி இருக்கின்றன. இதனால்தான் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதனை தங்களது டயட் அட்டவணையில் சேர்த்து கொள்கின்றனர். இது இருதய செயல்பாட்டிற்கு உதவுவதோடு குடல் இயக்கத்திற்கும் உதவுகிறது. இதனை பலர் […]

இந்தியா

பாகிஸ்தான் அதிகாரியை 24 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவு

  • May 14, 2025
  • 0 Comments

இந்தியாவின் புது டில்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் பணிபுரியும் பாகிஸ்தான் அதிகாரி ஒருவரை 24 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் அவரது அதிகாரப்பூர்வ அந்தஸ்துக்கு பொருந்தாத செயல்களில் ஈடுபட்டதற்காக இந்திய அரசாங்கம் அந்த அதிகாரியை ஒரு நபர் அல்லாதவராக அறிவித்துள்ளது என்று கூறியது. இது தொடர்பாக பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பொறுப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அறிவியல் & தொழில்நுட்பம்

களத்தில் ஸ்லிம் ஸ்மார்ட்போனை இறக்கிய Samsung

  • May 14, 2025
  • 0 Comments

சாம்சங் (Samsung) நிறுவனத்தின் ஸ்லிம் ஸ்மார்ட்போன் (Slim Smartphone) ஆக கேலக்ஸி எஸ்-25 சீரீஸின் லேட்டஸ்ட் மாடல் ஆக சாம்சங் கேலக்ஸி எஸ்-25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge) உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெறும் 5.8 மிமீ தடிமன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், கேலக்ஸி எஸ் சீரிஸில் அறிமுகமானதிலேயே மிகவும் மெலிதான ஸ்மார்ட்போனாகும். ஸ்லிம் டிசைன் தவிர்த்து 200 எம்.பி ப்ரைமரி கேமரா, கொரில்லா கிளாஸ் செராமிக் 2 ஸ்க்ரீன் ப்ரொடெக்ஷன், ஸ்னாப்டிராகன் 8 எலைட் […]

வட அமெரிக்கா

சிரியா மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக டிரம்ப் அறிவிப்பு

  • May 14, 2025
  • 0 Comments

சிரியா மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் சவுதி அரேபியா பயணத்தின் முதல் நாளன்று அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற சவுதி-அமெரிக்க முதலீட்டு மன்றத்தில் கலந்து கொண்டபோது அமெரிக்க ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் ஆகியோருடன் கலந்துரையாடிய பின்னர் அமெரிக்க ஜனாதிபதி […]

செய்தி

கட்டார் அரச குடும்பத்தினரால் டிரம்பிற்கு வழங்கப்படும் ஜெட் தொடர்பில் வெளியான தகவல்

  • May 14, 2025
  • 0 Comments

கட்டார் அரச குடும்பத்தினரால் வழங்கப்படும் சொகுசு ஜம்போ ஜெட் விமானத்தை ஏற்றுக்கொள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய வெளிநாட்டு பரிசாகக் கருதப்படும் பொருளின் சட்டபூர்வமான தன்மை குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. டிரம்ப் போயிங் 747-8 விமானத்தைப் பெற உள்ளார், பின்னர் அதை அவர் ஏர் ஃபோர்ஸ் ஒன்னாகப் பயன்படுத்துவார் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தனது இரண்டாவது பதவிக்காலம் முடிந்ததும், இந்தப் பரிசின் உரிமையை டிரம்ப் ஜனாதிபதி நூலக அறக்கட்டளைக்கு மாற்ற […]

விளையாட்டு

ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

  • May 14, 2025
  • 0 Comments

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் இளம் தொடக்க வீரரான சாம் கான்ஸ்டாஸ், காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் சேர்க்கப்பட்டுள்ளனர். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் வரும் ஜூன் 11 முதல் 15-ம் தேதி வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. […]

இலங்கை

இலங்கையின் சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

  • May 14, 2025
  • 0 Comments

இலங்கையின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, ஊவா, வடமத்திய, கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 1 மணியளவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும், மேல் மாகாணத்திலும், காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல், வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை […]