இலங்கை செய்தி

பாதுகாப்பு பிரதி அமைச்சர் திருமலை விஜயம்: காணி விடுவிப்பு குறித்து ஆராய்வு!

  • June 2, 2026
  • 0 Comments

பாதுகாப்புப் பிரதியமைச்சர் அருண ஜயசேகர இன்று முதன்முறையாகத் திருகோணமலை மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட சந்திப்பின்போது அவர் பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களது நீண்டகாலக் கோரிக்கைகளுக்குச் செவிமடுத்ததுடன், சில அவசரத் தேவைகளுக்கான உடனடித் தீர்வுகளையும் வழங்கினார். இதன்போது, திருகோணமலை மாவட்டத்தில் முப்படையினரால் பாதுகாப்புத் தேவைகளுக்காகக் கையகப்படுத்தப்பட்டுள்ள, பொதுமக்களுக்குச் சொந்தமான பூர்வீகக் காணிகளை மீள ஒப்படைப்பது தொடர்பான பிரதான கோரிக்கைகள் பிரதியமைச்சரிடம் விரிவாக முன்வைக்கப்பட்டன.   இவ்விடயம் குறித்துப் பாதுகாப்புத் தரப்பினருடன் […]

இலங்கை

பிள்ளையானின் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது!

  • June 2, 2026
  • 0 Comments

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழான கைது மற்றம் தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனு மீதான வாய்மொழி வாதங்கள்  நிறைவடைந்துள்ள  நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உலகம்

காங்கோவில் விமான நிலையம் திறப்பு – பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை!

  • June 2, 2026
  • 0 Comments

எபோலா நோய் பரவல் காரணமாக மூடப்பட்ட விமான நிலையத்தை காங்கோ ஜனநாயகக் குடியரசு மீண்டும் திறந்துள்ளது. இடுரி மாகாணத்தின் முக்கிய விமான நிலையமான புனியா விமான நிலையம் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீள திறக்கப்பட்டுள்ளது. குறித்த விமான நிலையம் மனிதாபிமான பொருட்கள் மற்றம் மருத்துவ பொருட்களை கொண்டு செல்ல திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில், விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை படிப்படியாகவும் பாதுகாப்பாகவும் மீண்டும் தொடங்க” தற்போது நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மீளவும் வழமையான செயற்பாடுகளை ஆரம்பிக்க […]

உலகம் செய்தி

ஈரான் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும்: Netanyahu எச்சரிக்கை!

  • June 2, 2026
  • 0 Comments

இஸ்ரேலுக்கு எதிராக சதி செய்யும் எதிரிகள் அதற்காக மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும் என்று இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu எச்சரித்துள்ளார். இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் பிரிவின் தலைவராக பணியாற்றிய David Barnea வின் பணிநிறைவு விழாவில் உரையாற்றுகையிலேயே பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த எச்சரிக்கையை விடுத்தார். ஈரான் நாட்டின் தற்போதைய ஆட்சி நிலைகுலைந்து வருவதாகவும், அந்த அரசாங்கம் விரைவில் வீழ்ச்சியடையும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, கடந்த ஐந்து ஆண்டுகளில் மொசாட் தலைவர் செய்த […]

ஐரோப்பா

ரஷ்யாவில் தலைத்தூக்கியுள்ள பட்ஜெட் பிரச்சினை!! போர் செலவீனத்தை முடக்க அறிவுரை!

  • June 2, 2026
  • 0 Comments

உக்ரைனில் நேற்று இரவு ரஷ்யா ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்திருந்த நிலையில் மக்கள் பலர்  குண்டுவெடிப்புத் தடுப்பு முகாம்களிலும், நிலத்தடி மெட்ரோ நிலையங்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக கீவ் நகரில் பெரிய வெடிப்புகளும், புகை மண்டலங்களும் ஏற்பட்டதாகவும், இதில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், குழந்தைகள் உட்பட 58 பேர் காயமடைந்ததாகவும் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ  (Vitali Klitschko) தெரிவித்தார். இதற்கிடையே போரை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு போதுமான […]

உலகம் செய்தி

உக்ரைன்மீது ரஷ்யா மிகப்பெரிய தாக்குதல்: 14 பேர் பலி!

  • June 2, 2026
  • 0 Comments

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகப்பொரிய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 14 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். தலைநகர் கிவ் மற்றும் டினிப்ரோ ஆகிய நகரங்களில் உள்ள குடியிருப்புகள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உக்ரைன் முன்னதாக நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியதுடன், மக்கள் பாதுகாப்பு எச்சரிக்கைகளை பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளார். […]

உலகம்

ஜப்பானில் மின்விநியோகம் துண்டிப்பு : 9 பேர் பலி!

  • June 2, 2026
  • 0 Comments

ஜப்பானை தாக்கிய ஜாங்மி (Jangmi ) புயல் காரணமாக 09 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த புயல் காரணமாக பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் புயல் காரணமாக, கியூஷுவில் (Kyushu) உள்ள மியாசாகி (Miyazaki) நகரில்  கிட்டத்தட்ட 400,000 குடியிருப்பாளர்கள் வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக ஒகினாவாவைத் தாக்கிய குறித்த புயல் தற்போது வடக்கு நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பல பகுதிகளில் பரவலான மழை பெய்யும் என்றும், பலத்த காற்று வீசக்கூடும் […]

செய்தி பொழுதுபோக்கு

இசைஞானிக்கு வாழ்த்து மழை…..!

  • June 2, 2026
  • 0 Comments

கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சங்களில் இசையாய் வாழ்பவரான இசைஞானி இளையராஜா இன்று தனது 83-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு எக்ஸ் , பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் #HappyBirthdayIlaiyaraaja, #இசைஞானி போன்ற ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ரசிகர்கள் தங்களின் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த இளையராஜாவின் காலத்தால் அழியாத பாடல்கள், பின்னணி இசைக்கோர்ப்புகள் மற்றும் அரிய புகைப்படங்களைப் பகிர்ந்து தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இளையராஜாவின் இசையில் பாடிய பாடகர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் […]

உலகம்

ஜார்ஜியாவில் சோகம் : திருமணம் முடிந்த கையோடு மணமகன் உயிரிழப்பு!

  • June 2, 2026
  • 0 Comments

ஜார்ஜியாவின் கிராமப்புறத்தில், புதுமணத் தம்பதியினரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த மணமகன் உயிரிழந்துள்ளதுடன், மணமகள் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். ஜார்ஜியாவின் டாசன் கவுண்டியில் (Dawson County) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில், 25 வயதான மணமகன் டேவ் ஃபிஜியும், பெயர் குறிப்பிடப்படாத விமானியும் உயிரிழந்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு அவர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. பிரெஸ்டீஜ் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த ஹெலிகாப்டர், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளாகியது. இது […]

செய்தி விளையாட்டு

ஆஸியை வீழ்த்தி தொடரை வெல்லுமா பாகிஸ்தான்?

  • June 2, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் ODI கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகின்றது. லாகூரில் பாகிஸ்தான் நேரப்படி மாலை 5 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா […]